அதாவது லியோன் என்ன சொல்றாருன்னா.. "இந்திய அணி பெருசு..ரஹானே பெத்த பெருசு"!
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்ற நிலையில், அந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோனிற்கு இந்திய வீரர்கள் தங்களது கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை பரிசளித்தனர்.
இந்நிலையில் இந்திய அணி மற்றும் ரஹானேவிற்கு ஆஸ்திரேலிய ஆப் -ஸ்பின்னர் நாதன் லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிய இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2018-19 ஆண்டில் பெற்ற வெற்றியை இந்திய இளம் அணி மீண்டும் சாதித்துள்ளது.

அனைவரையும் கவர்ந்த போட்டி
பிரிஸ்பேனில் இறுதியாக நடைபெற்ற தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட இந்திய ஜெர்சியை ஆஸ்திரேலிய ஆப் -ஸ்பின்னர் நாதன் லியோனிற்கு பரிசளித்தனர்.

ஜெர்சிக்கு லியோன் நன்றி
அவர் அந்த போட்டியின்மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடியதை பாராட்டும் வகையில் இந்திய வீரர்கள் இந்த ஜெர்சியை பரிசளித்தனர். இந்நிலையில் இந்திய வீரர்களின் இந்த செயலுக்கு நாதன் லியோன்
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு பாராட்டு
இந்திய வீரர்கள் அளித்த ஜெர்சி உள்ளிட்ட அந்த போட்டியின் பல்வேறு புகைப்படங்களை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள லியோன், இந்திய அணி மற்றும் கேப்டன் ராஹானேவிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்கு பெரிய பாராட்டு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்ததாக மிகப்பெரிய இலக்குகளை தான் நிர்ணயிக்கும் தருணம் இது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications