சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் சாதனை... யாராலும் முறியடிக்க முடியாது!
Recommended Video

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்துள்ள சாதனையை இனி யாராலும் எப்போதும் முறியடிக்க முடியாது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. 2016 மற்றும் 2017ல் தடையால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவில்லை. இதுவரை பங்கேற்ற 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணியாக சிஎஸ்கே உள்ளது.

2008ல் 2வது இடம், 2009ல் பிளே ஆப் சுற்று, 2010, 2011ல் சாம்பியன், 2012, 2013ல் இரண்டாவது இடம், 2014ல் பிளே ஆப் சுற்று, 2015ல் இரண்டாவது இடம் பிடித்தது சிஎஸ்கே.
2016 மற்றும் 2017ல் சிஎஸ்கே விளையாடவில்லை. இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கியுள்ள சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதன் மூலம் அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சாதனையை சிஎஸ்கே புரிந்துள்ளது. சிஎஸ்கே ஐபிஎல்க்கு திரும்பியுள்ளதால், இனி இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது.


Click it and Unblock the Notifications