Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியில் அரைசதம் அடிக்க உதவிய டிராவிட் “போன் கால்”.. நன்றியுடன் ஹனுமா

லண்டன் : இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தன் முதல் சர்வதேச போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடி வருகிறார்.

தன் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி, எப்படி தன் முதல் போட்டியை அணுகினார் என்பது குறித்து கூறியுள்ளார்.

அதில் சுவாரஸ்யமான சம்பவமாக டிராவிட் உடன் போனில் பேசியதாகவும், அது தன் முதல் போட்டி என்ற பய உணர்வை கட்டுப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

டிராவிட் உடன்..

டிராவிட் உடன்..

தன் முதல் போட்டியில் களம் இறங்குவதற்கு ஒரு நாள் முன்பு, இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அறியப்படும் ராகுல் டிராவிட் உடன் போனில் பேசியுள்ளார் ஹனுமா. ராகுல் டிராவிட் தான் இந்தியா "ஏ" அணியில் ஹனுமா விஹாரியை பட்டை தீட்டியவர். டிராவிட் சில நிமிடங்கள் இவருடன் பேசியதாகவும், அது அவரது பய உணர்வுகளை ஓரளவு கட்டுக்குள் வைத்ததாகவும் கூறியுள்ளார்.

டிராவிட் சொன்னது என்ன?

டிராவிட் சொன்னது என்ன?

டிராவிட், "உன்னிடம் திறமை உள்ளது. நல்ல மனநிலை உள்ளது. களத்தில் ஆட அமைதியான மனம் உள்ளது. அங்கே சென்று அனுபவித்து விளையாடு" என கூறியதாக தெரிவித்தார். டிராவிட் தான் தன் அணி வாய்ப்புக்கு முக்கிய காரணம். அவருக்கு கீழ் இந்தியா "ஏ" அணியில் ஆடியதால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என நன்றி பாராட்டியுள்ளார் இந்த இளம் வீரர்.

வம்பிழுத்த ஸ்டோக்ஸ்

வம்பிழுத்த ஸ்டோக்ஸ்

ஹனுமா பேட்டிங் செய்த போது முதலில் ஆண்டர்சன் - பிராடு அனுபவ கூட்டணியின் பந்துகளை எதிர்கொண்டார். ஓரளவு அதை சமாளித்த அவர் அடுத்து ஸ்டோக்ஸ் பந்து வீசியபோது ஒரு சிக்ஸ் அடித்தார். இதை அடுத்து ஸ்டோக்ஸ், அவரிடம் கோபமாக பேசினார். அப்போது, அருகில் இருந்த கோலி, ஹனுமாவை சாந்தப்படுத்தி தொடர்ந்து ஆட வைத்தார். அவருடைய உதவிக்கும் தன் நன்றிகளை கூறினார்.

ஹனுமா செய்த சாதனை

ஹனுமா செய்த சாதனை

நேற்று அரைசதம் அடித்த ஹனுமா, இங்கிலாந்தில் தன் முதல் போட்டியில் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், நான்காவதாக கங்குலி, டிராவிட் ஆகியோருடன் இணைந்துள்ளார். தன் முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடிக்கும் 26வது இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.

Story first published: Monday, September 10, 2018, 15:57 [IST]
Other articles published on Sep 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+