Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுல் ஒரு வாய் காபி குடிச்சது குத்தமாய்யா.. இப்படி ஓட்டறீங்களே

பெங்களூர்: கே. எல். ராகுல் காபி குடிப்பது போல போட்டோ போட்டாலும் போட்டார்.. ரசிகர்கள் அவரை வைத்து செய்து கொண்டுள்ளனர்.

காபி குடிக்கும் ராகுலை வைத்து ஜாலியான கமெண்டுகளையும், மீம்ஸ்களையும் பறக்க விட்டு வருகின்றனர் ரசிகர்கள். அவரும் அதை ரசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டுள்ளாராம்.

இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவடுத்துள்ளவர் ராகுல். ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் கலக்கியிருப்பார். ஆனால் அது மிஸ் ஆகி விட்டது.

ஒரு கப் காபி

ஒரு கப் காபி

ராகுல் ஒரு காபி பிரியர். காபி கொடுத்தால் குடித்துக் கொண்டே இருப்பாராம். அப்படிப்பட்டவர் ஒரு காபியை மெய் சிலிர்த்து ரசித்து ருசித்து குடிப்பது போல போட்டோ போட்டார். உடனே குவிந்து விட்டனர் ரசிகர்கள். அந்தப் படத்தை வைத்து மீம்ஸ்கள் பறக்கின்றன. கமெண்டுகள் குவிகின்றன. காபி வித் கரணுடன் இணைத்தும் கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

பழைய பஞ்சாயத்து

பழைய பஞ்சாயத்து

இதற்குக் காரணம் இருக்கிறது. 2019ல் நடந்த 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் இவரும் ஹர்திக் பாண்டியாவும் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் குறித்து இவர்கள் கூறிய கமெண்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. எனவே அதை வைத்துத்தான் இப்போது ரசிகர்கள் ஓட்டி வருகின்றனர். ஒரு ரசிகர்.. ஏற்கனவே பட்டது போதாதா.. காபியை விட்டு தள்ளியே இருங்க ராகுல் என்று கிண்டலடித்துள்ளார்.

விராட் கோலியும் கமெண்ட்

விராட் கோலியும் கமெண்ட்

விராட் கோலியும் இதை விடவில்லை. இதே படத்தை இன்ஸ்டாகிராமிலும் போட்டிருந்தார் ராகுல். அங்கு வந்து ஜாலியான கமெண்ட் போட்டு விட்டுப் போயுள்ளார் விராட் கோலி. காபி வித் கரண் நிகழ்ச்சியில் செக்ஸியான கமெண்ட்டை சொன்னதற்காக இரு வீரர்களும் ஆஸ்திரேலியா டூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ரூ. 20 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டது.

நல்ல வீரர்

நல்ல வீரர்

அந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வந்த ராகுல், அதன் பின்னர் சர்ச்சைகளைத் தவிர்த்து கிரிக்கெட்டில் தீவிர கவனம் செலுத்தினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி முக்கிய வீரராக உருவெடுத்தார். அணிக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்கும் வீரராக தான் உருவெடுத்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, May 29, 2021, 21:44 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+