For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீரென சரிந்த தல தோனி…! தாங்கிப் பிடித்த இருவர்… என்ன நடந்தது? ரசிகர்கள் பரபரப்பு

சென்னை:சரிந்து விழுந்த தல தோனியை இருவர் தாங்கி பிடிக்கும் புகைப் படங்கள் இணையத்தில் வெகு வேகமாக வைரலாகி வருகின்றன. தோனிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் அசத்தி வருகிறது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 8ல் வெற்றி பெற்றுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளனர். அதில் 2 ஆட்டங்களில் தோனி விளையாட வில்லை. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்தது.

தோனியின் உடல்நிலை

தோனியின் உடல்நிலை

இந்த போட்டியில் தோனி பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தோனியால் விளையாட இயலவில்லை என்று பயிற்சியாளர் பிளெமிங் கூறினார்.

ரசிகர்கள் பீதி

ரசிகர்கள் பீதி

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ படு வேகமாக பரவி வருகிறது. அந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். என்ன ஆச்சு என்று பெரும் பீதி அடைந்துள்ளனர்.

சிஎஸ்கே ஆடையில் தோனி

சிஎஸ்கே ஆடையில் தோனி

அந்த புகைப்படத்தில் இருப்பது இதுதான். சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடை அணிந்து தோனி உட்கார்ந்திருக்கிறார். அவர் உட்கார்ந்திருப்பது அதில் தெளிவாக தெரிகிறது.

தாங்கி பிடித்தனர்

தாங்கி பிடித்தனர்

ஆனால்... உற்று பார்த்தால் கீழே விழப்போகும் அவரை... இருவர் சேர்ந்து தாங்கிப் பிடிப்பது நன்றாக தெரிகிறது. தல தோனி சாதாரணமாக தான் கீழே விழுந்தாரா அல்லது மயங்கி விழுந்தாரா என்பது அந்த புகைப்படத்தில் தெரியவில்லை.

தோனி விழுந்துவிட்டார்

தோனி விழுந்துவிட்டார்

இந்த புகைப்படம் இறக்கை கட்டிக்கொண்டு இணையத்தில் வலம் வருகிறது. பலரும் தங்களது வாட்ஸ் அப்பில் அதனை பகிர்ந்து வருகின்றனர். தல மயங்கி விழுந்துவிட்டார்.. என்ன ஆனது என்றே தெரியவில்லையே என்று ஆளாளுக்கு வசனம் எழுதி கவலைப்பட்டு வருகின்றனர்.

வேதனையில் ரசிகர்கள்

வேதனையில் ரசிகர்கள்

இன்னும் சொல்லப்போனால்... தோனி ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று விட்டனர். அவரது ரசிகர்களால் சற்றும் தாங்க இயலவில்லை. தலைக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, April 29, 2019, 21:34 [IST]
Other articles published on Apr 29, 2019
English summary
A picture, about dhoni goes viral in social media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+