For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பந்தில் விக்கெட்டை தூக்கிய விஜய் சங்கர்.. கோலி கொடுத்த செம ரியாக்ஷன்.. வைரல் போட்டோ

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர், எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே!

லண்டன்: தனது முதல் உலக கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதித்தார் விஜய் சங்கர். அதற்கு கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்தான் இன்று இரவு இன்டர்நெட் வைரலாகியுள்ளது.

ஐந்தாவது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசியபோது, 4வது பந்தில், தசை பிடிப்பு ஏற்பட்டது. மிச்சமிருந்த 2 பந்துகளை வீச அழைக்கப்பட்டார், விஜய் சங்கர். நாம பொதுவா இந்த மாதிரி ஸ்பேர் பந்து போட வரும் பவுலர்களை பேபி ஓவர் வீசுறாங்கய்யான்னு சொல்வோமே, அதே பேபி ஓவர்தான் அது. ஆனால் என்ன ஒரு ஆச்சரியம், வந்த முதல் பந்திலேயே, இமாம் உல்-ஹக் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் எடுத்தார் விஜய் சங்கர்.

A picture of Virat Kohli with Vijay Shankar goes viral

உலக கோப்பையில், தான் ஆடிய முதல் போட்டியின் முதல் பந்திலேயே, விக்கெட்டை வீழ்த்தினார், விஜய் சங்கர். இந்திய பவுலர் யாரும் இதற்கு முன்பு செய்யாத சாதனை இது. அப்படிப்பட்ட, விஜய் சங்கரை பாராட்டி கோலி கொடுத்த ரியாக்ஷன் போட்டோதான் இப்போது வைரலாகியுள்ளது.

பார்றா.. இவரெல்லாம் முதல் பால்ல விக்கெட் எடுக்குறாரு, என கையை காட்டி, சக வீரர்களிடம் கிண்டல் செய்வதைப் போல அந்த போஸ் இருந்தது. இதை எந்த மாதிரி சூழ்நிலைக்கும் பயன்படுத்தலாம் என்பதால் மீம் கிரியேட்டர்கள் குஷியாகியுள்ளனர்.

வடிவேலு ஒருபடத்தில், போய்யா.. என்று கையை காட்டிக்கொண்டு நடப்பாரே, அதை விராட் கோலி செய்கை எடுத்துக் காட்டுவதை போல உள்ளது.

Story first published: Sunday, June 16, 2019, 22:08 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
A picture of Virat Kohli with Vijay Shankar goes viral in social media, where the Indian skipper teasing his team mate.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+