WATCH: 40 அடி உயர கேலரி..! தலைகீழாக விழுந்த சிறுமி..! அப்புறம் நடந்த அதிர்ச்சி சம்பவம்..? வீடியோ
Recommended Video
சாவ்பாவ்லோ: கால்பந்து மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுமி, 40 அடி உயரம் கொண்ட கேலரியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் பபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது. அந்த மைதானத்தில் சாவ் பாலே, ஜெரிமோ ஆகிய அணிகள் மோதின. சாவ்பாலோ அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எக்கச்சக்கம்.
எனவே, இரு அணிகளின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி கொண்டிருந்தனர். பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த இந்த போட்டியில் கால்பந்து வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.

40 அடி உயரம்
அப்போது மைதானத்தில் 40 அடி உயரத்திலிருந்த கேலரியின் தடுப்புக்கு அருகில் 13 வயது சிறுமி ஒருவர் உற்சாகமாக ஆடி கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது.
விழுந்த சிறுமி
அந்த சிறுமி கால் தவறி கீழே, அதுவும் தலைகீழாக விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தப்பினார்
அங்கு அந்த சிறுமியை பரிசோதித்தனர். சோதனையில், 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பி உள்ளார். பெரிய காயங்கள் எதுவும் இல்லை. உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

வைரல் வீடியோ
அந்த சிறுமி யார் என்று தெரியவில்லை. அவருடன் வந்தவர்கள் யார் என்ற விவரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications