VIDEO: கலக்கலோ… கலக்கல்…! சென்னையில் தெருவுக்கு தோனி பெயர் வைத்த 13 வயது சிறுவன்… சூப்பர்
Recommended Video
சென்னை:சென்னையில் ஒரு தெருவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில் அது குறித்த வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் 3 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தற்போது இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட முடியும்.

தோனியின் ஆட்டம்
ஆனால் அந்த இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை அணி நேற்று எதிர்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், கடைசி ஓவரில் தோனியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

வித்தியாசமான ரசிகர்கள்
பொதுவாக மற்ற ரசிகர்களை காட்டிலும் தமிழக ரசிகர்கள் வித்தியாசமானவர்கள். தங்களின் ஆதர்ஷ கதாநாயகனாக நினைத்துவிட்டால்... அவர்களை கொண்டாடும் விதமே தனி.

ரசிகர்களின் ரோல் மாடல்
நடிகைக்கு கோயில் கட்டியது, தமது குழந்தைகளுக்கு பெயர் வைப்பது, இல்லை எனில் தான் ரோல் மாடலாக நினைப்பவர்களின் பெயர்களை தம்முடன் இணைத்து வைத்துக் கொள்வது என்று கூறிக் கொண்டே போகலாம்.
தெருவுக்கு தோனி பெயர்
அந்த வகையில் சென்னை பூந்தமல்லியில் ஒரு தெருவுக்கு கேப்டன் கூல் தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே வீடியோ
அந்த வீடியோவில் பேசும் தோனியின் ரசிகனாக சிறுவன் ஹர்ஷந்த், சிறுவயது முதலே கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் தமது தந்தையின் உதவியுடன் தெருவுக்கு தோனி பெயர் வைத்துள்ளதாக கூறியிருக்கிறார். இணையத்தில் தற்போது இந்த வீடியோ தான் டாப்.


Click it and Unblock the Notifications