For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடித்தது லக்... இந்திய அணியில் திருநெல்வேலிகாரர்... இலங்கை டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்

By Shyamsundar

சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக தமிழக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். விஜய் ஷங்கர் என்ற அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர் இலங்கைக்கு எதிராக நடக்கும் இரண்டாவது மற்றும் முன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். பல எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து இவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் இந்திய அணியில் இணைவதற்கு முன்பே பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஏற்கனவே இந்திய சர்வதேச அணியில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளி விஜய் என்று மூன்று தமிழக பிளேயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர்குமாருக்கு டும் டும்

புவனேஸ்வர்குமாருக்கு டும் டும்

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்குமார் தனது காதலியை நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்கிறார். இந்த திருமணம் டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது. இதனால் அவர் 24ம் தேதி இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இருந்த தவானும் விலகி இருக்கிறார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட மாட்டார்.

தமிழக பிளேயர்

தமிழக பிளேயர்

இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் என்ற பிளேயர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இவர் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஷிகர் தவானின் இடத்தை பெரும்பாலும் முரளி விஜய் நிரப்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஷிகர் தவான் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாடுவார்.

யார் அந்த விஜய் ஷங்கர்

யார் அந்த விஜய் ஷங்கர்

இந்திய அணியில் இணைந்து இருக்கும் விஜய் ஷங்கர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். மேலும் சென்னை அணி தடை செய்யப்பட்ட போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். மிகவும் திறமையான வீரரான இவர் 2015ல் இருந்த இந்திய 'எ' அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக பேட்ஸ்மேன்களில் இவர் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் வைத்து இருக்கிறார். 27 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த பவுலராகவும் இருக்கிறார்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

இவர் இந்திய அணியில் இணைவது பெரிய திட்டம் ஒன்றை கருத்தில் கொண்டு என கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியம் தற்போது எந்த பிளேயரை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பி வருகிறது. எல்லா பிளேயர்களும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் தற்போது 'ரொட்டேஷன் பாலிசி' எனப்படும் பிளேயர்களை மாற்றி மாற்றி அணியில் எடுக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இவரை டெஸ்ட் போட்டிகளுக்கு இனி விளையாட வைக்க முடிவு செய்துள்ளனர். வலது கை பவுலிங், வலது கை பேட்டிங் செய்யக்கூடிய இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

தமிழ்நாடு ஆதிக்கம்

தற்போது அணியில் இணைந்து இருக்கும் விஜய் ஷங்கரையும் சேர்த்து டெஸ்ட் போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். ஓப்பனிங் பேட்டிங்கிற்கு முரளி விஜய், ஸ்பின் பவுலிங்கிற்கு அஸ்வின், ஆல்ரவுண்டராக விஜய் ஷங்கர். இந்த நிலையில் இந்திய அணியில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் தான் மூன்று பிளேயர்கள் விளையாடி வருகின்றனர். வேறு எந்த மாநிலத்துக்கும் இந்த பெருமை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அணியில் இணைந்து இருக்கும் விஜய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளது.

Story first published: Tuesday, November 21, 2017, 17:08 [IST]
Other articles published on Nov 21, 2017
English summary
A Tamilnadu player named Vijay Shankar got selected in Indian test squad against Sri lankan series. He has played for Chennai Super Kings, Sun Risers Hyderabad and Indian A team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+