Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஓவரில் 13 ரன் தேவை.. பறந்த சிக்ஸர்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா! தவான், பதான் ஆட்டம் வீண்

லண்டன்: இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் 2025 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் லீக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், காலும் பெர்குசன் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

தவான், யூசுப் பதானின் அதிரடி

முதலில் பேட்டிங் செய்த இந்திய சாம்பியன்ஸ் அணி, ஷிகர் தவானின் அபாரமான ஆட்டத்தால் வலுவான தொடக்கத்தைப் பெற்றது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தவான் 60 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் கடைசி கட்டத்தில் இணைந்த யூசுப் பதான், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 23 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதில் நான்கு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது.

A Thriller Finish Australia Wins with a Last-Ball Six Dhawan and Pathan s Efforts in Vain

சாவ்லாவின் சிறப்பான பந்துவீச்சு

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா சிம்மசொப்பனமாக விளங்கினார். ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அவர் பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பெர்குசனின் திருப்புமுனை ஆட்டம்

இனி இந்தியாவின் வெற்றி எளிது என்று நினைத்த நேரத்தில், காலும் பெர்குசன் மற்றும் டான் கிறிஸ்டியன் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்த ஜோடி 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலிய அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தது. சிறப்பாக ஆடிய கிறிஸ்டியன் 39 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கடைசி வரை களத்தில் நின்ற காலும் பெர்குசன் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி சார்பில் இர்பான் பதான் வீசிய அந்த ஓவரில், பெர்குசன் ஒரு சிக்ஸர் அடித்து, ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு த்ரில் வெற்றியைத் தேடித் தந்தார். ஷிகர் தவான் மற்றும் யூசுப் பதானின் சிறப்பான ஆட்டம் வீணானாலும், இந்த போட்டி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத த்ரில்லர் விருந்தாக அமைந்தது.

Story first published: Saturday, July 26, 2025, 22:52 [IST]
Other articles published on Jul 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+