Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்ளோ இடைவெளியா விடறது... ஒரு டிரக் போயிருக்கலாம்... விளாசிய சுனில் கவாஸ்கர்

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான துவக்கத்தை அளிக்காமல் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதையடுத்து அவர்களது பேட்டிற்கும் பேடிற்கும் இடையிலான இடைவெளியில் ஒரு டிரக் கூட சென்றிருக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டி அடிலெய்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. இதில் துவக்கத்தில் களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சொதப்பினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டி அடிலெய்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. இதில் துவக்கத்தில் களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சொதப்பினர்.

17 ரன்களில் மயங்க் அவுட்

17 ரன்களில் மயங்க் அவுட்

பிரித்வி ஷா 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட் ஆன நிலையில், மயங்க் அகர்வாலும் 17 ரன்களிலேயே வெளியேறினார். வெளிநாட்டில் இந்தியா விளையாடிவரும் முதல் பகலிரவு போட்டியான இதில் சிறப்பான துவக்கத்தை அளிக்க வேண்டிய துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கவாஸ்கர் குற்றச்சாட்டு

கவாஸ்கர் குற்றச்சாட்டு

இந்நிலையில் தங்களின் பேட் மற்றும் பேட்டிற்கு இடையில் அதிகமான இடைவெளியை ஷா மற்றும் அகர்வால் விட்டதாலேயே அவர்களால் நிலைத்து ஆட முடியாமல் போனதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பேட்டிற்கும் பேடிற்கும் இடையிலான இடைவெளி சரியாக இருந்தால்தான் சிறப்பாக விளையாட முடியும் என்றார் அவர்.

டிரக் சென்றிருக்கலாம்

டிரக் சென்றிருக்கலாம்

மயங்க் அகர்வால் அவுட் ஆன பந்தில் அவரது பேடிற்கும் பேட்டிற்கும் இடையில் கேப் இல்லாதது போல தெரிந்தது. ஆனால் மயங்க் அகர்வாலின் பேடிற்கும் பேட்டிற்கும் இடையிலான தூரத்தில் ஒரு டிரக் கூட சென்றிருக்க முடியும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுவே மயங்க் மற்றும் ஷா செய்த மிகப்பெரிய தவறு என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டார்.

Story first published: Thursday, December 17, 2020, 15:55 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+