Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா இதுவும், அதுவும் ஒன்னா.. ரமிஸ் ராஜாவை வச்சு செய்த ஆகாஷ் சோப்ரா..அப்படி நடக்க வாய்ப்பே இல்லை

மும்பை: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்பாக ரமிஸ் ராஜா வெளியிட்ட கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் பாணியில் தொடங்கப்பட்ட தொடர் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக். இந்த தொடரின் வருமானம் தற்போது தான் 300 கோடிஐ தொட்டுள்ளது.

ஆனால் ஐபிஎல் தொடரின் ஆண்டு வருமானம் 4 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது, இதனால் உலகின் நம்பர் 1 கிரிக்கெட் என்ற பெருமையை ஐபிஎல் தான் பெற்றுள்ளது.

ரமிஸ் ராஜா கருத்து

ரமிஸ் ராஜா கருத்து

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா, பிஎஸ்எல் தொடரில் இனி டிராஃப்ட் முறைக்கு பதில், ஏலம் முறையை கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். அணிகள் ஏலத்தில் செலவு செய்ய வேண்டிய பண அளவின் உச்ச வரம்பை உயர்த்தினால் இனி எந்த வீரர்கள் பிஎஸ்எல் ஐ தாண்டி ஐபிஎல்க்கு செல்வார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

உண்மை இது தான்

உண்மை இது தான்

ரமிஸ் ராஜாவின் கருத்து கடும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, பிஎஸ்எல் தொடரில் ஏலம் முறையை அமல்படுத்தினாலும், எந்த ஒரு வீரரும் 16 கோடி ரூபாய்க்கு ஏலம் போக மாட்டார். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை அதற்கான வருமானமும், சூழலும் பாகிஸ்தானுக்கு இல்லை. இது தான் உண்மை.

அதிக ஊதியம்

அதிக ஊதியம்

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றவர் கிறிஸ் மொரிஸ், அவருடைய ஒரு பந்து வீசியதற்கான ஊதியத்தை மட்டும் நீங்கள் மற்ற கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியத்தை வைத்து ஒப்பிட்டால் கூட, மொரிசின் ஊதியம் தான் அதிகமாக இருக்கும். பிஎஸ்எல் தொடரில் அதிகபட்ச ஊதியமே ஒன்றரை கோடி ரூபாய் தான்.

மார்க்கெட் குறைவு

மார்க்கெட் குறைவு

வீரர்களுக்கான ஊதியம், தொலைக்காட்சி உரிமம் ஒப்பந்தம், அணியின் வியாபாரம், அணி செலவிடும் தொகை இதை எல்லாம் வைத்து முடிவு செய்யப்படும். வெறும் வீரர்களின் ஊதியத்தை மட்டும் உயர்த்தினால் உங்களுக்கு தோல்வி நிச்சயம். இந்தியா மார்க்கெட் என்பது மிகவும் பெரியது. 100 கோடி மக்கள் என்பது உண்மையில் இந்தியாவின் வரம் தான். ஆனால் பாகிஸ்தானுடைய மார்க்கெட் மிகவும் சிறியது என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, March 18, 2022, 14:10 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+