Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"உலகக் கோப்பை வென்றால் அவர் சிறந்த கேப்டனா?".. அதைவச்சு என்ன பண்றது? - ஆகாஷ் சோப்ரா

மும்பை: 'நாம் எதன் அடிப்படையில் சிறந்த கேப்டன் யார் என்பதை தீர்மானிக்கிறோம்?' என்று புதிய சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

இதன் மூலம் தங்களது பல ஆண்டு ஐசிசி கோப்பை கனவை நனவாக்கியது நியூசிலாந்து. ஆனால், இந்திய அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இன்னமும் வைக்கப்பட்டு வருகின்றன.

 பேட்டிங் திறன்

பேட்டிங் திறன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வி காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து அதிகம் கேள்வி எழுப்பப்டுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கு கோலி கேப்டனாக இருப்பதால், அவரது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

 கோப்பை ஒன்றுமில்லை

கோப்பை ஒன்றுமில்லை

அதேசமயம், கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி பட்டங்களையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2013 சாம்பியன்ஸ் டிராபி தான் இந்தியா கடைசியாக வேண்டிட ஐ.சி.சி பட்டமாகும். அதன்பின், 2014 டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது, 2016 டி 20 உலகக் கோப்பையிலும், 2019 ஒருநாள் உலகக் கோப்பையிலும் அரையிறுதிப் போட்டியில் நாக் அவுட் ஆனது. இடையில், 2017 ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் தோற்றது. இப்போது WTC இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில், கேப்டன்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

 அளவுகோல் என்ன?

அளவுகோல் என்ன?

இதுகுறித்து அவர் கூறுகையில், "கேப்டன்களின் சாதனை என்பது எத்தனை ஐசிசி கோப்பைகளை அவர்கள் வென்றிருக்கிறார் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, தரவரிசையில் எவ்வளவு காலம் முதல் இடத்தில் நீடித்தார்கள் மற்றும் அவர்களின் வெற்றி சதவிகிதத்தை வைத்து நிர்ணயிக்கப்படவில்லை.

 டிராவிட்டுடன் ஒப்பிடும்போது

டிராவிட்டுடன் ஒப்பிடும்போது

கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் கபில் தேவின் வெற்றி சதவீதம் என்ன? சவுரவ் கங்குலியின் இந்திய அணி ஒருநாள் அல்லது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததா? அப்படி பிடித்திருந்தது என்று நீங்கள் நினைத்தால், அது எவ்வளவு காலம் அந்த நிலையில் நீடித்தது? எம்.எஸ். தோனியின் ஒருநாள் கிரிக்கெட்டின்ன் வெற்றி சதவீதம், ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடும்போது என்ன? என்று அடுக்கடுக்காக ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஆதங்கம்

ஆதங்கம்

இவையெல்லாம் கடினமான கேள்விகள், இல்லையா? அதை சற்றே எளிதாக்குவோம். இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டன் யார்? 2007 ல் இந்தியா டி 20 உலகக் கோப்பையையும், 2011 ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றபோது கேப்டன் யார்? கேள்விகளை முழுமையாகப் படிப்பதற்கு முன்பே நீங்கள் பதிலளித்து இருப்பீர்கள். 1983 ஆம் ஆண்டில் முதல் உலகக் கோப்பை வெற்றிக்கு இந்தியாவை வழிநடத்தியது கபில் தேவ் தான், மற்ற இரண்டு கேள்விகளுக்கும் தோனி தான் பதில். கிரிக்கெட்டில் சாதனைகள் இவ்வாறு தான் வரையறுக்கப்படுகின்றன" என்று தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

Story first published: Saturday, June 26, 2021, 21:28 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+