Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒரே செயலில் 2 பிரச்சினை தீரும்” கே.எல்.ராகுலால் ரிஷப் பண்ட்-க்கு ஆபத்து.. எச்சரித்த ஆகாஷ் சோப்ரா!

மும்பை: இந்திய அணியின் முன்னணி வீரருக்கு துணைக்கேப்டன் கே.எல்.ராகுலை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ம் தேதியன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

 ஆகாஷ் சோப்ரா விளக்கம்

ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இந்த தொடரில் இந்திய அணியின் செய்ய வேண்டிய திட்டம் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் இனி ஓப்பனிங்கில் களமிறங்கக்கூடாது என்றும் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாட வேண்டும் எனக்கூறியுள்ளார். இதற்கு காரணம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் இறங்குவதால் அவரின் பேட்டிங், தானாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கு அழுத்தம் கொடுக்கும். ரிஷப் பண்ட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார். ஏதாவது ஒரு போட்டியில் அடிப்பதை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். தென்னாப்பிரிக்க தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 101 ரன்கள் தான் அடித்தார். ஒரே போட்டியிலேயே 85 ரன்கள் அடித்தார். மற்ற 2 ஆட்டங்களில் சொதப்பினார்.

2 பிரச்சினைகள் தீரும்

2 பிரச்சினைகள் தீரும்

கே.எல்.ராகுல் மட்டும் மிடில் ஆர்டரில் விளையாடினால் ஒரே கல்லில் இரண்டு பிரச்சினையை தீர்க்கலாம். அதாவது கே.எல்.ராகுல் ஒரு விக்கெட் கீப்பிர் பேட்ஸ்மேனாகும். அதே போல மிடில் ஆர்டரில் களமிறங்கும் அனுபவம் உடையவர். எனவே அதனை செய்ய வேண்டும். உலகக்கோப்பைக்கு நேரம் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் மாற்றங்களை கொண்டு வந்தால் தான் நல்லது என ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிசிசிஐ எடுத்த நடவடிக்கை

பிசிசிஐ எடுத்த நடவடிக்கை

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிஷப் பண்ட்-க்கு துணைக்கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அழுத்தத்தால் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, February 4, 2022, 17:32 [IST]
Other articles published on Feb 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+