For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீரர்களை ஆதரிச்சா பதவி கிடைக்குமா? கேஎல் ராகுல் விவகாரத்தில் இது தான் நடக்குதா? ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் விவாதத்தை ஏற்படுத்திய வீரராக கே எல் ராகுல் இருக்கிறார். சமீபத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சொதப்பி வருகிறார். எனினும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது.

நடப்பு தொடரில் கேஎல் ராகுல் 3 இன்னிங்ஸில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் அடித்த ஸ்கோர் 20, 17, 1 மட்டும் தான். இதனால் பலரும் கேஎல் ராகுலை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராகுல் டிராவிட் , கே எல் ராகுல் அந்நிய மண்ணில் சிறப்பாக விளையாடுவதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

பதவி கிடைக்குமா?

பதவி கிடைக்குமா?

இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு வழங்கப்பட்ட துணை கேப்டன் பதவி அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ராகுல் மூன்றாவது டெஸ்டில் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கே எல் ராகுலை குறிவைத்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கே எல் ராகுல் விவகாரத்தில் முன்னாள் வீரர்கள் யாரும் விமர்சிப்பதில்லை. அதற்கு காரணம் ஐபிஎல் அல்லது இந்திய அணியில் ஏதேனும் பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தால் இப்படி செய்கிறார்கள் என்று சாடியுள்ளார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இந்த நிலையில் வெங்கடேஷ் பிரசாத் கருத்துக்கு முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட் தொடர் முடிவதற்குள் அணியில் விளையாடும் வீரர் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம். அது அவர்களை மனதளவில் பாதிக்க செய்யும் என்று வெங்கடேஷ் பிரசாத்துக்கு ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பிரசாத் தொடர்ந்து தவறான முடிவு எடுக்கப்பட்டு இருப்பதால் அது குறித்து குரல் எழுப்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக பதிலளித்தார்.

கேஎல் ராகுலுக்கு ஆதரவு

கேஎல் ராகுலுக்கு ஆதரவு

தற்போது இதற்கு ஆகாஷ் சோப்ரா மீண்டும் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணில் கேஎல் ராகுல் வெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடி இருப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலே சொன்ன நாடுகளில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்களின் பட்டியலை ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ளார் .இதில் கே எல் ராகுல் 7 போட்டிகளில் விளையாடி 541 ரன்களை அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

பதவி வேண்டாம்

பதவி வேண்டாம்

ரோகித் சர்மாவுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரராக கே எல் ராகுல் திகழ்கிறார் என்பதை ஆகாஷ் சோப்ரா சுட்டி காட்டுகிறார். தாம் கே எல் ராகுலுக்கு ஆதரவளிப்பதால் எனக்கு பிசிசிஐயில் பயிற்சியாளர் அல்லது தேர்வு குழு உறுப்பினர் உள்ளிட்ட எந்த பதவியும் வேண்டாம். ஐ பி எல் அணிகளிலும் எந்த அணிக்கும் வழிகாட்டி மற்றும் பயிற்சியாளர் பதவியில் தமக்கு தேவை இல்லை என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது சரியா?

இது சரியா?

இதன் மூலம் வீரர்களை ஆதரவு தெரிவித்தால் பதவி கிடைக்கும் என வெங்கடேஷ் பிரசாத் கூறியதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஆகாஷ் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார். எனினும் இந்த கருத்துக்கு ஏற்கனவே பதில் கொடுத்துள்ள வெங்கடேஷ் பிரசாத், வெளிநாடுகளில் கே எல் ராகுல் சதம் அடித்து விட்டு தொடர்ந்து சொதப்பி வருவதை தான் தாங்கள் சுட்டிக்காட்டுவதாகவும், ஒரு சதம் அடித்து விட்டு பல இன்னிங்ஸ்கள் விளையாடாமல் இருப்பது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Story first published: Tuesday, February 21, 2023, 10:38 [IST]
Other articles published on Feb 21, 2023
English summary
Aakash chopra gives support to KL Rahul over his form வீரர்களை ஆதரிச்சா பதவி கிடைக்குமா? கேஎல் ராகுல் விவகாரத்தில் இது தான் நடக்குதா? ஆகாஷ் சோப்ரா கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+