அதையே மாத்திட்டீங்களே.. நியாயமா?? இஷான் கிஷனின் பேட்டிங்கில் புகார்.. எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா!!
மும்பை: இஷான் கிஷான் ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் ருதுராஜுக்கு அந்த இடம் போகும் என ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்ற போதும், ஓப்பனிங்கை மாற்ற வேண்டும் என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

இஷான் கிஷான் சொதப்பல்
இந்த 3 போட்டிகளிலுமே கே.எல்.ராகுல் இல்லாததால், இளம் வீரர் இஷான் கிஷான் தான் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார். அவர் சிறப்பாக விளையாடிய போதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு காரணம் ஸ்ட்ரைக் ரேட். 3போட்டிகளிலும் அவர் 35, 2, 34 என ரன்களை குவித்தார். இதில் 2 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழே தான் இருந்தது.

நம்பியுள்ள மும்பை
இஷான் கிஷான் அறிமுகமானபோது அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். ஒரு இடதுகை வீரர், விக்கெட் கீப்பர், ஓப்பனிங்கே அதிரடி காட்டுவார் ஆகிய 3 சிறப்புகளும் ஒருசேர இருப்பதால் தான் ஐபிஎல்-ல் கூட இவர் அதிக தொகைக்கு ஏலம் போனார். ஆனால் தற்போது தனது ஆட்டத்தையே மாற்றிக்கொண்டுள்ளார்.

சோப்ரா எச்சரிக்கை
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, இஷான் கிஷான் மீது மீண்டும் அழுத்தங்கள் குவிந்துள்ளன. அவர் சிறப்பாக தான் விளையாடினார், ஆனால் ஸ்ட்ரைக் ரேட் பல கேள்விகளை எழுப்புகிறது. தொடக்கமே அதிரடிக் காட்டுவார் என களமிறக்கினால், அந்த பணியை அவர் செய்யவே இல்லை. இது ஏமாற்றமாக இருந்தது.

மாற்று வீரர்
இதனால் ருதுராஜுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. 3வது போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் தவறான ஷாட் அடித்து அவுட்டானார். இஷான் கிஷான் இனி ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தாமல் இருந்தால் மாற்று வீரர்களுக்காக நிச்சயம் இந்திய அணி யோசிக்கும் என்பது போல ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications