Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கேவுக்கு இது பெரும் சிக்கல்... .ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் முன்னாள் வீரர்...விவரம் என்ன?

மும்பை: சென்னை அணிக்கு இந்தாண்டு ஐபிஎல்-ன் தொடக்கம் சரியாக இருக்காது என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பெரும் தோல்வியை சந்தித்த சென்னை அணி, இந்த முறை அதிரடியாக களமிறங்க தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு சி.எஸ்.கே அணிக்கு சிறப்பான தொடக்கம் இருக்காது எனவும் மிக தடுமாறும் எனவும் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

 சி.எஸ்.கே அணி

சி.எஸ்.கே அணி

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மார்ச் 9ம் தேதி முதல் இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு படு மோசமாக விளையாடியது. இதனால் இந்தாண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மார்ச் மார்ச் 9ம் தேதி முதலே பயிற்சியை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. இந்தாண்டு போட்டிகாக தோனி புதிய வியூகத்தை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 சி.எஸ்.கேவுக்கு சிக்கல்

சி.எஸ்.கேவுக்கு சிக்கல்

கொரோனா காரணமாக அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடங்களிலிலேயே ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், சென்னை அணிக்கு முதல் 5 போட்டிகள் மும்பை அணியில் நடைபெறுகிறது. இதனால் சி.எஸ்.கேவுக்கு ஸ்பின்னிங்கில் உதவும் சென்னையில் எந்த போட்டியும் நடைபெறவில்லை. ஆனால் இதற்கு முன்னதாகவே சி.எஸ்.கே அணியில் மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் வாங்கப்பட்டனர். அணியில் ஏற்கனவே ஜடேஜா, சாண்ட்னர், இம்ரான் தாஹீர், கார்ன் ஷர்மா என ஸ்பின்னர் பட்டாளம் உள்ளது.

 சொதப்பல்

சொதப்பல்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் ஆகாஷ் சோப்ரா, மும்பை பிட்சானது 70% வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் ஒன்றாகும். அங்கு அதிக விக்கெட் எடுத்ததும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆகும். எனவே ஸ்பின்னர்களுக்கு பிட்ச் ஒத்துழைக்காததால், ஸ்பின்னர் பலம் கொண்ட சென்னை அணிக்கு முதல் 5 போட்டிகள் தடுமாற்றமாக இருக்கும். அணியில் தீபக் சஹார், லுங்கி நெகிடி, ஷர்துல், பிராவோ, சாம் கரண், ஹாசல் வுட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அது போதாது.

 அதுவே சாதனை

அதுவே சாதனை

மும்பை மைதானத்தில் முதல் ஆடும் அணி குறைந்தது 180 ரன்கள் வைக்கலாம். எனவே அங்கு முற்றிலும் வேறு மாதிரி சென்னை அணி ஆட வேண்டும். அங்கு நடைபெறும் 5 போட்டிகளில் சென்னை 3 போட்டிகளில் வென்றால் கூட அது பெரிய விஷயம் தான். ஆனால் சி.எஸ்.கேவுக்கு அங்கு நல்ல தொடக்கம் கிடைக்காது, தடுமாறும் என தெரிவித்துள்ளது.

 மைதானங்கள்

மைதானங்கள்

இதே போல பெங்களூரு மைதானமும் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்று. வேகப்பந்து வீச்சே அங்கு செல்லுபடியாகும். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானமும் வேகப்பந்து வீச்சுக்கே அதிகளவில் உதவும். எனவே சென்னை அணி இதனை சமாளிப்பது சிரமம். அவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். டெல்லி மைதானம் மட்டும் சிறிய அளவில் இருப்பதால் அங்கு சென்னையின் ஸ்பின்னர்களுக்கு வேலை இருக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 31, 2021, 14:02 [IST]
Other articles published on Mar 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+