“இளம் பவுலருக்கு இத்தனை கோடியா” மெகா ஏலத்தில் அனைவரும் குறிவைக்கும் வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு
மும்பை: இந்திய இளம் வீரருக்கு மெகா ஏலத்தில் அதிக தொகை குவியும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து அணிகளும் தங்கள் அணி நிர்வாகிகளுடன் சேர்ந்து மெகா ஏலத்திற்கான திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மெகா ஏலம்
இந்த முறை அயல்நாட்டு வீரர்களை விட இந்திய இளம் வீரர்களுக்கு அதிக மவுசு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி ருதுராஜ் கெயிக்வாட், பஞ்சாப் அணி பிஷ்னாய், கொல்கத்தா வெங்கடேஷ் ஐயர் என இளம் வீரர்களை தக்கவைத்ததன் மூலம் மீதமுள்ள வீரர்களை மற்ற அணிகள் டார்கெட் செய்துள்ளது.

சோப்ராவின் கணிப்பு
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் குறிவைக்கப்போகும் வீரர் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,
இந்தியாவை சேர்ந்த பவுலர்கள் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அதில் முக்கியமானவராக தீபக் சஹார் இருக்கிறார். ஏனென்றால், பவர் பிளேவில் அதிக விக்கெட்கள் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது.

என்ன காரணம்
மற்ற இந்திய பவுலர்களைவிட தீபக் சஹார்தான், பவர் பிளேவில் அதிக விக்கெட்களை வீழ்த்துகிறார். அனைத்து அணிகளுமே, ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை விரைவாக பிரிக்க முயற்சிக்கும். ஏனென்றால் அப்போது தான் எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்ட வாய்ப்பு கிடைக்கும். அதனை தீபக் சஹார் சரியாக செய்து வருகிறார். எனவே அவருக்கு அதிக டிமெண்ட் அதிகமாகும்.

கூடுதல் மவுசு
தென்னாப்பிரிக்க தொடர் மூலம் தீபக் சஹாரின் மவுசு மேலும் கூடியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு பெற்ற அவர், 2 விக்கெட்கள் எடுத்தது மட்டுமல்லாமல் அரைசதமும் விளாசி அசத்தினார். இதனால் பேட்டிங்கிற்காகவும் அவருக்காக அனைத்து அணிகளும் குறிவைத்துள்ளன.


Click it and Unblock the Notifications