Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா வந்தாலும் எந்த பயனும் இல்ல.. காரணத்தை குறிப்பிட்டு ஆகாஷ் சோப்ரா திட்டவட்டம்.. IND vs AUS

மும்பை : டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் கடைசி கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன .

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

பந்துவீச்சில் குறை

பந்துவீச்சில் குறை

ஆசிய கோப்பையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரை வென்று இழந்த பெருமையை மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டி20 போட்டியில் 208 ரன்கள் அடித்தும் இந்திய அணி மோசமான பந்துவீச்சு காரணமாக தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

மாற்றம் நிகழாது?

மாற்றம் நிகழாது?

இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் உமேஷ் யாதவுக்கு பதில் பும்ரா அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஒரு பந்துவீச்சாளர் அணிக்குள் வந்து மொத்தத்தையும் மாற்ற முடியாது. இதுதான் உண்மை நிலவரம்.மும்பை அணிக்கு ஐபிஎல் தொடரில் என்ன ஆச்சு என்று பார்த்தீர்களா? மும்பை அணியில் பும்ரா இருந்தும் அந்த அணி தோற்றது தானே?

வாய்ப்பே கிடையாது

வாய்ப்பே கிடையாது

எனவே ஒரே வீரர் ஒரு போட்டியில் ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகளை எடுக்காத வரை அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. சாஹல் எதற்கு வேகமாக பந்து வீசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. சுழற் பந்துவீச்சாளர் தனது வேகத்தை குறைத்தால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும். இந்தியாவின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு அணியை வைத்துக்கொண்டு உலக கோப்பையை வெல்வது என்பது சாத்தியம் கிடையாது.

வென்றே தீர வேண்டும்

வென்றே தீர வேண்டும்

இந்திய அணி எஞ்சிய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்றே தீர வேண்டும். இல்லையெனில் நான்கு முக்கிய வீரர்கள் இல்லாத ஒரு அணியிடம் தோற்றோம் என்ற நிலை உருவாகிவிடும். பும்ரா வந்தால் அனைத்தும் மாறிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ,ஆகாஷ் சோப்ரா கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கண்டிப்பாக ஒரு வீரரால் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒப்பிட்டு கூறியிருப்பது உண்மையே.

Story first published: Thursday, September 22, 2022, 18:29 [IST]
Other articles published on Sep 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+