Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?

மும்பை: டி20 உலக கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி முடிவடைகிறது.

பவுலிங்கில் குழப்பம்

பவுலிங்கில் குழப்பம்

இந்த தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என 3 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா, யுவேந்திர சாஹல், ரவி பிஷ்னாய் என 4 பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இதில் யுவேந்திர சாஹல் நிச்சயம் ப்ளேயிங் 11ல் இடம்பிடிப்பார் என்பதால், மற்றொரு இடத்திற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா இடையே போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் ஜடேஜா வாய்ப்பு பெற்று விளையாடலாம். எனவே அஸ்வின் எதற்காக அணியில் சேர்க்கப்பட்டார் என்பதே ரசிகர்களுக்கு குழப்பமாக உள்ளது. ஏனென்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு திடீரென அவர் டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா பதில்

ஆகாஷ் சோப்ரா பதில்

இந்நிலையில் அவரின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில், கடந்த உலகக்கோப்பையில் அஸ்வின் திடீரென தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் திடீரென கொண்டு வரப்பட்டார். அப்படியே ஆசிய கோப்பையிலும் இடம்பெற்றுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில்?

டி20 உலகக்கோப்பையில்?

எனவே வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரிலும் அஸ்வின் விளையாடுவார். இது அணிக்கு சரியா? தவறா ? என்றெல்லாம் பார்க்க முடியாது. ஏனென்றால் எதுபோன்ற சுழற்பந்துவீச்சாளர் அணிக்கு தேவை என்பதை பொறுத்து அது மாறுபடும். அந்தவகையில் அஸ்வின் அவ்வப்போது தேவைப்படுகிறார் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 16, 2022, 0:57 [IST]
Other articles published on Aug 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+