Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதை செய்தால் தான் எதிர்காலமே.. இல்லையென்றால் கிளம்புங்கள்.. நட்சத்திர வீரர்களுக்கு வந்த எச்சரிக்கை!

2 நட்சத்திர வீரர்கள் மீண்டும் இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Bhuvneshwar Kumarக்கு England Seriesல் ஏன் Chance கொடுக்கப்படவில்லை? | OneIndia Tamil

இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்திய அணியில் கடந்த சில தொடர்களாக வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

இந்தியாவின் மெயின் அணியில் நட்சத்திர வீரர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் திகழ்ந்தனர். ஆனால் இவர்களுக்கு கடந்த சில தொடர்களாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

காரணம் என்ன

காரணம் என்ன

ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து மீண்ட பிறகு பந்துவீச்சில் ஈடுபட தயக்கம் காட்டி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அதே போல வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் டெஸ்ட் தொடரில் பல ஓவர்களை வீச விரும்பவில்லை எனக்கருத்துக்கள் பரவின.

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

இந்நிலையில் இவர்களின் டெஸ்ட் எதிர்காலம் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில் அவர், ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச மாட்டேன் என தெரிவித்துவிட்டார். எனவே அவர் பந்துவீசினால் மட்டுமே அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்காலம் உள்ளது. அதுகிட்டத்தட்ட கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட்டது. எனவே பாண்ட்யாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரியை பயன்படுத்தலாம்.

புவனேஷ்குமார் எதிர்காலம்

புவனேஷ்குமார் எதிர்காலம்

புவனேஷ்வர் குமாரை அணியில் இருந்து விலக்கி வைக்க முடியாது. தற்போது அவருக்கு உடற்தகுதியில் பிரச்னை உள்ளது. அவர் டெஸ்டில் விளையாட விரும்பவில்லை என தகவல் வெளியானது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அவருக்கு அடுத்ததாக வரும் தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 11, 2021, 15:25 [IST]
Other articles published on Jul 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+