Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரருக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை.. டிவில்லியர்ஸுக்கும் கிடைத்த தருணம்..நெகிழ்ச்சி சம்பவம்

மும்பை: இந்தியாவில் சச்சின், தோனி, கோலிக்கு கிடைத்த குறிப்பிட்ட மரியாதை டிவில்லியர்ஸ் பெற்ற தருணத்தை முன்னாள் வீரர் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக டிவில்லியர்ஸ் குறித்த பேச்சுக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதற்கு காரணம் அவர் மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்க மாட்டேன் என அறிவித்தது தான்.

அவரின் அதிரடி ஆட்டத்தை மீண்டும் காண வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவரது பழைய ஆட்டங்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஏபி டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றி மறக்க முடியாத வீரராக திகழ்பவர் டிவில்லியர்ஸ். ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிரடி காட்டி தனக்கென மிஸ்டர் 360 என தனி முத்திரை பதித்தவர். குறிப்பாக இவரின் ஆட்டத்திற்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. வில்லைப்போல் போல் எல்லா திசையிலும் வளைந்து ஆடும் அவரின் திறமை இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடிகள் ஆகும்.

தனி மரியாதை

தனி மரியாதை

இந்நிலையில் இந்தியாவில் அவரின் சிறந்த ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார். அதில், தற்போதைய காலத்து இந்திய கிரிக்கெட்டை பார்த்தால் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்தவுடன் அரங்கமே அதிரும். ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷத்தை எழுப்புவார்கள். அது ஒரு தனி மரியாதை. அந்த மரியாதையை தென்னாப்பிரிக்க வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் பெற்றதை நான் பார்த்துள்ளேன். அது மறக்க முடியாத நினைவு எனக்கூறியுள்ளார்.

2015ல் நடந்த சம்பவம்

2015ல் நடந்த சம்பவம்

கடந்த 2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. அதில் அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் 2 சதங்களை விளாசி அசத்தினார். அதில் குறிப்பாக வான்கடேவில் 119 ரன்களை விளாசிய போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் ஏபிடி, ஏபிடி என பெரும் முழக்கமிட்டனர். அயல்நாட்டு வீரருக்கு இந்தியாவில் இப்படி ஒரு வரவேற்பா என அனைவரும் வியந்தனர்.

வருத்தம்

வருத்தம்

அப்படிபட்ட டிவில்லியர்ஸ் இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதன் பின்னர் 2 முறை தென்னப்பிரிக்க அணியில் மீண்டும் சேர விருப்பம் தெரிவித்தும் அது நிறைவேறவில்லை. வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவே இறுதியானது என டிவில்லியர்ஸ் கூறிவிட்டார்.

Story first published: Friday, May 21, 2021, 17:04 [IST]
Other articles published on May 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+