Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. சர்பிராஸ் கான் ஏமாற்ற பட்டதாக உணர்வார்.. முன்னாள் வீரர் கடும் தாக்கு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக டி20 வீரர் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எனினும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு வரும் சர்பிராஸ்கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2021- 22 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் சப்ராஸ்கான் 982 ரன்களை அடித்தார்.

இதில் நான்கு சதங்களும் ஒரு அரை சதமும் அடங்கும். அந்தத் தொடரில் அவருடைய சராசரி 122 ரன்கள் என்ற வகையில் இருந்தது. தற்போதைய சீசனில் சர்ப்ராஸ்கான் 431 ரன்கள் அடித்திருக்கிறார்.

சர்பிராஸ் கான் சாதனை

சர்பிராஸ் கான் சாதனை

இதில் அவருடைய சராசரி 107 ஆகும். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். சர்பிராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரி 80.47 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் டான் பிராட்மனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையை சப்ராஸ்கான் படைத்திருக்கிறார். எனினும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு சப்ராஸ்கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஏமாற்றப்பட்டு விட்டோம்

ஏமாற்றப்பட்டு விட்டோம்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சூரிய குமாரை விட சப்ராஸ்கானுக்கு தான் வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் சர்பிராஸ் கானின் பெயர் ஏன் அணியில் இல்லை என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக அவர் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று நினைத்து இருப்பார். ஏனெனில் நடுவரசையில் சப்ராஸ்கானைத் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதே போன்று பும்ராவின் பெயரும் ஏன் இல்லை என்று எனக்கு தெரியவில்லை.

பிராட்மேனுக்கு பிற சாதனை

பிராட்மேனுக்கு பிற சாதனை

ஆனால் அதைவிட சர்பிராஷ் கான் தேர்வு செய்யப்படாது குறித்து தான் எனக்கு கவலை அளிக்கிறது. சூரியகுமாரை நீங்கள் தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்றால் ஒரு இடம் காலியாக இருக்கிறது என்று தானே அர்த்தம் .அப்போது அந்த இடத்தில் சப்ராஸ்கான் தான் சரியான நபராக இருந்திருப்பார். அவருடைய சராசரி 80 என்ற அளவில் இருக்கிறது. டான் பிராட்மேனுக்கு பிறகு அவர்தான் அதிக சராசரி வைத்திருக்கிறார் என்ற ரெக்கார்டும் இருக்கிறது.

என்னுடைய ஓட்டுக்கு சர்பிராஸ்

என்னுடைய ஓட்டுக்கு சர்பிராஸ்

இந்திய அணியில் இடம் பெற சப்ராஸ்கானால் என்ன முடியுமோ அத்தனையும் அவர் செய்துவிட்டார். நிச்சயமாக இது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.

ஒருவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றால் நீங்கள் அவருக்கு தானே வாய்ப்பு வழங்க வேண்டும். சூர்யாகுமார் சப்ராஸ் கான் என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் சர்பிராஸ் கானுக்கு தான் வாய்ப்பு வழங்குவேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 14, 2023, 20:38 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+