Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய அணிகளுக்கு எதிராக நடக்கிறதா ஐசிசி? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதை கவனச்சீங்களா?

மும்பை : ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக ஐசிசி தொடர்ந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி கடந்த இரண்டு முறையாக இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இதற்கு மற்ற கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒரே நாட்டில் இரண்டு முறை ஐசிசி தொடர் நடைபெறுகிறது என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஏன் இங்கிலாந்தில் மட்டும் நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்து ஏன்?

இங்கிலாந்து ஏன்?

இரண்டு அணிகளுக்கும் நடுநிலையான மைதானம் என்று ஏன் இங்கிலாந்து தேர்வு செய்யப்படுகிறது. அதுவும் ஆசிய அணிகளுக்கு எதிரான பல சூழலை கொண்டுள்ள மைதானங்கள் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவது ஏன்? இறுதிப்போட்டி ஏன் ஒரே ஒரு டெஸ்ட் ஆக நடைபெற வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியனை நிரூபிக்க ஏன் ஒரு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வைத்து தீர்மானிக்க கூடாது.

தனித்துவமான போட்டி

தனித்துவமான போட்டி

இல்லையெனில் ஒரு போட்டி அவர்கள் சொந்த மண்ணிலும் மற்றொரு போட்டி ஏன் நடுநிலையான மைதானத்தில் வைக்க கூடாது. கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக தெரியலாம். எந்தத் தொடரும் ஒரு சாம்பியனை முடிவு செய்ய இரண்டு ஆண்டுகள் நடைபெறாது. எனவே சாம்பியனை தேர்வு செய்ய ஒரு நாக் அவுட் போட்டி போதாது என்பது என்னுடைய முடிவு. விளையாட்டு உலகில் டெஸ்ட் கிரிக்கெட் தான் தனித்துவமான விளையாட்டாகும்.

வேகப்பந்துவீச்சு ஆடுகளம்

வேகப்பந்துவீச்சு ஆடுகளம்

அது ஐந்து நாட்கள் நடைபெற கூடியவை. இந்த தொடர் இரண்டு ஆண்டுகள் நடைபெறுவதால் குறைந்தபட்சம் இறுதி போட்டியை மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடராக நடத்துவது சிறப்பாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். முதல் முறையாக இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் இருந்தது.

பின்னடைவு

பின்னடைவு

இதில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதனால் ஆசிய அணிகளுக்கு இங்கிலாந்து போன்ற ஆடுகளங்கள் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ஐசிசி யின் இந்த முடிவு ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஆசிய ஆடுகளங்களில் நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Wednesday, March 15, 2023, 13:32 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+