Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs பாக் போட்டி எப்போது தான் வைப்பீங்க?இதுக்கு பேரு ஐசிசி தொடரா ? ஆகாஷ் சோப்ரா கண்டனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி தொடரின் அடுத்த இரண்டு ஆண்டு சைக்கிளுக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. இதிலும் இந்திய அணியும் பாகிஸ்தானும் ஒரு தொடரில் கூட விளையாடவில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நாள் டி20 டெஸ்ட் என எதிலும் இருதரப்பு தொடர்களாக விளையாடுவதில்லை. இரு அணிகளும் மோதிக்கொண்டால் ஐசிசி தொடரில்தான் விளையாடுகிறார்கள்.

இதனால் ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலாவது இரு அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இரு அணிகளும் கடைசியாக 2007 எட்டாம் ஆண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார்கள். அதன் பிறகு இரு அணிகளும் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரில் விளையாடியது இல்லை.

Aakash chopra slams ICC For Not organizing india vs pakistan match in WTC Cycle

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐசிசி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் நீங்கள் மற்ற அணிகளுடன் விளையாட மாட்டீர்கள் என்பது சரி. ஆனால் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப். ஐசிசி நடத்தும் தொடர் இது. இந்தத் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் ஒரு முறை கூட இந்தியா பாகிஸ்தான் மோதும் வகையில் போட்டி அமைக்கப்படவில்லை. அப்படி என்றால் இது ஐசிசி தொடர் என்று உங்களால் நம்ப முடிகிறதா இதுபோல் இதுவரை நடந்ததே இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நீங்கள் இந்தியா பாகிஸ்தான் மோதும் வகையில் தான் அட்டவணையை தயாரித்து இருக்க வேண்டும். இதன் மூலம் வர்த்தக ரீதியாக உங்களால் வெற்றி பெற முடியும்.

தொலைக்காட்சியிலும் டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் விளையாடுவதால் இது எப்படி ஐசிசி தொடர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியும். இறுதிப்போட்டி மட்டும் ஐசிசி நடத்துகிறார்கள். இந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறும் சைக்கிளில் உள்ள அனைத்து போட்டிகளும் ஐசிசி யால் நடத்தப்படுகிறது. இந்த சைக்கிளும் முடிந்து விட்டால் இந்தியா பாகிஸ்தான் தொடர் இல்லாமல் ஆறு ஆண்டுகள் ஆகிவிடும்.

இது ஐசிசி தொடர் என்றால் எங்களுக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் இந்த டெஸ்ட் போட்டிகளை இருத்தொடர்பு தொடராக தான் நடத்துகிறோம். டெஸ்ட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக WTC என்று பெயரை வைத்திருக்கிறோம் என்று உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள் என ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடியிருக்கிறார்.

Story first published: Friday, June 16, 2023, 17:02 [IST]
Other articles published on Jun 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+