Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர்கள் 2 பேரும் கண்டிப்பாக தேவை.. இதுதான் சரியான வாய்ப்பு.. இலங்கை தொடருக்காக ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்!

மும்பை: இந்திய அணியில் குறிப்பிட்ட 2 வீரர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நாளை தொடங்குகிறது.

இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

ப்ளேயிங் 11 எதிர்பார்ப்பு

ப்ளேயிங் 11 எதிர்பார்ப்பு

ஐபிஎல் மற்றும் விஜய் ஹாசரே தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இலங்கை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களும் அதிரடி காட்டுவார்கள் என்பதால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த பேச்சுக்கள் தற்போது இருந்தே எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்த இலங்கை தொடரில் குறிப்பிட்ட இரண்டு வீரர்களுக்கு ஒன்றாக விளையாட வேண்டும் என்று தனது ஆலோசனையை கூறியுள்ளார்.

சோப்ராவின் அட்வைஸ்

சோப்ராவின் அட்வைஸ்

இதுகுறித்து பேசியுள்ள அவர், கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய இருவரும் சேர்ந்து விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு போட்டியில் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து புறக்கணிப்பது சரியானது அல்ல. இலங்கை அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இவர்கள் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Recommended Video

Ind Vs SL Two Wickets In An Over For Kuldeep Yadav | Oneindia Tamil
வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

இலங்கை தொடரில் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தான் அவர்களின் திறமையும் வெளிப்படும். இந்திய அணியின் சுழற்பந்து ஜோடியாக சிறப்பாக விளையாடிய அவர்களை தற்போது வாய்ப்பு கொடுக்காமல் அமர வைப்பது தவறு. இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர்களின் திறமையை வெளிக்கொணர முடியும் எனக்கூறியுள்ளார்.

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

குல்தீப் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க ஆரம்ப காலக்கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், தற்போது எளிதாக கணித்து விளையாட தொடங்கிவிட்டனர். எனவே கடந்த 2 ஆண்டுகளாகவே இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடர்களிலும் பிளேயிங் லெவனில் விளையாடுவதில்லை.

Story first published: Saturday, July 17, 2021, 22:14 [IST]
Other articles published on Jul 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+