
இந்திய அணி பிளான்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்க ப்ரித்வி ஷாவை அழைக்க, இந்திய அணி ஏற்பாடு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

மிடில் ஆர்டரில் ராகுல்
ப்ரித்வி ஷா தற்போது இலங்கை தொடரில் உள்ள நிலையில், இந்தியன் அணியின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாயங்க் அகர்வால் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவார் என்று பிசிசிஐ கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஓப்பனிங் ஸ்லாட் பிரச்சனை தற்போது அல்மோஸ்ட் முடிவுக்கு வந்துவிட்டது. அதேசமயம், லோகேஷ் ராகுல் மிடில் ஆர்டர் வீரராக களமிறக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரு ஓப்பனிங் ஆப்ஷன்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, "இந்த கதையில் மிக முக்கியமான இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது, மாயங்க் அகர்வால் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் ஓப்பனர்களாக இறங்க தயாராக வைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது, கே.எல்.ராகுலும் இருக்கிறார். ஆனால் அவர் ஓப்பனிங் இறக்கப்பட்ட மாட்டார் என்று நம்பப்படுகிறது. ராகுல் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என்று அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதுதான் புரியல
"அதாவது, இது ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, ராகுல் ஐந்து டெஸ்ட் சதங்களை அடித்திருக்கிறார். அவை அனைத்தும் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி அடித்தது தான். ஆனால், அவர்கள் ஏன் திடீரென அவரை மிடில் ஆர்டரில் களமிறக்க விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது அசாதாரண சூழ்நிலை என்பது எனக்கு புரிகிறது. இருந்தாலும், எனக்கு விளங்காத விஷயம் என்னவென்றால், ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனை எப்படி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக்குவார்கள்? என்பதுதான்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications