
உலகக்கோப்பை ப்ளான்
ரோகித் சர்மா - டிராவிட் கூட்டணி ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான பணிகளை தொடங்கிவிட்டது. அதன் காரணமாக தான் ஒவ்வொரு இடத்திற்கும் இளம் வீரர்களை பரிசோதித்து பார்க்கின்றனர். இதில் தனி கவனம் ஈர்த்துள்ளவர் தான் தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர். வேகப்பந்துவீச்சாளராகவும் உதவுவார், மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் உருவெடுத்திருக்கிறார்.

விமர்சனங்கள்
இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என பேச்சுக்கள் எழுந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஹர்திக் பாண்ட்யா சரியான ஃபார்மில் இல்லை. அவர் பவுலிங் வீசவில்லை என்ற புகார்கள் இருந்தன. மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் உருவானது.

ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்நிலையில் இதற்கு அப்படியே மாற்று கருத்தை கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்ட்யாவின் திறமை என்னவென்பது குறித்து நாம் அறிந்ததே. அவர் மட்டும் முழு உடல் தகுதி பெற்று வந்தால், அவருக்கு இணையாக யாரும் இருக்க முடியாது. மேலும் இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது.

என்ன காரணம்
நான் வெங்கடேஷ் ஐயரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் அவரை விட ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் மிகச் சிறந்த வீரராக இருப்பார். ரவீந்திர ஜடேஜாவும், பாண்டியாவும் ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி மேலும் பலம் பெறும். வெங்கடேஷ் ஐயர் தற்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ஹர்டிக் பண்டியா ஓரளவு நல்ல அனுபவம் கொண்டவர். இதனால் அவரை எடுத்துக்கொண்டு வெங்கடேஷ் ஐயரை பிசிசிஐ கழட்டிவிடும் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











