சென்னை: தனது கீப்பிங்கின் மூலம் மேலும் ஒரு டைமன்ஷனை அம்பத்தி ராயுடு சேர்த்துள்ளார் என்று கலாய்த்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2019 தொடரின் 44வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி காய்ச்சல் காரணமாக ஆடவில்லை. அதனால் சுரேஷ் ரெய்னா கேப்டன்ஷிப் பொறுப்பில் விளையாடினார். கீப்பராக ராயுடு செயல்பட்டார்.

2015 உலக கோப்பை போட்டியில் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம்பிடித்த ராயுடு, இந்தமுறை தேர்வாகவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வாகி இருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய நீக்கம் குறித்து ட்விட்டரில் மறைமுகமாக தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் ராயுடு. அவர் கூறி இருந்ததாவது: உலக கோப்பை போட்டியை (வீட்டிலிருந்து) பார்க்க இப்போதுதான் 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்துள்ளேன் என்று கூறினார்.
இதனை வைத்து ஆகாஷ் சோப்ரா, அம்பத்தி ராயுடுவை கேலி செய்துள்ளார். நேற்றைய தோனி இல்லாத நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கீப்பராக செயல்பட்ட அம்பத்தி ராயுடுவை அவர் வித்தியாசமாக கலாய்த்துள்ளார். தனது ஆட்டத்தில் கீப்பிங் செய்து மேலும் ஒரு டைமன்சனை சேர்த்துள்ளார் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.