“ரகானேவின் கழுத்திற்கு கீழ் கத்தி”.. விதியை நிர்ணயிக்கப்போகும் முதல் டெஸ்ட்.. எச்சரித்த ஆகாஷ் சோப்ரா
மும்பை: அஜிங்கியா ரகானேவின் கழுத்திற்கு கத்தி வைத்துள்ளது போன்ற போட்டிதான் நியூசிலாந்து தொடர் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
Recommended Video
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக டெஸ்ட் தொடரில் மோதுகிறது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அணித் தேர்வுகள் தான் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் அஜிங்கியா ரகானே கேப்டனாக செயல்படவுள்ளார். என்னதான் அவர் கேப்டனாக இருந்தாலும், ப்ளேயிங் 11ல் இடம்பெற்றதே பெரிய விஷயம் என்பது போல ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஏனென்றால் இங்கிலாந்து தொடரில் அவர் செய்த சொதப்பல்கள் தான்.

குவிந்த விமர்சனங்கள்
சமீப காலங்களாகவே டெஸ்ட் போட்டிகளில் அஜிங்கியா ரகானே மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அவர் 8 இன்னிங்ஸ்களில் 7 முறை 20 ரன்களுக்கு உள்ளாகவே விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஒரு அரைசதம் மட்டும் ஆறுதலுக்கு அடித்தார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வந்த சூழலில் தான் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆச்சரியப்படும் ஆகாஷ் சோப்ரா
இந்நிலையில் ரகானேவின் கழுத்திற்கு கீழ் கத்தி உள்ளது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரகானேவுக்கு முதல் டெஸ்ட் போட்டி மிக முக்கியமானது. அவர் கேப்டனாக இருக்கலாம். எனினும் அவருக்கு அதிக அழுத்தம் உள்ளது. நல்ல வேளையாக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. அது நடந்திருந்தால், நியூசிலாந்து தொடரில் ரகானே இடம்பெற்றிருப்பாரா என்பது கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

கடைசி நம்பிக்கை
ஒன்றை மட்டும் ரகானே நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். 2வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக கோலி வந்துவிடுவார். இந்த தொடரில் மயங்க் அகர்வால், ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவர்கள் சிறப்பாக விளையாடிவிட்டால் அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடரில் நிச்சயம் இடம்பெற்றுவிடுவார்கள். இதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவும் வந்துவிடுவார். எனவே இவர்களில் யார் சிறப்பாக ஆடினாலும் ரகானேவுக்கு தான் சிக்கல். எனவே கிடைத்துள்ள இந்த கடைசி வாய்பை ரகானே மிக சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications