Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவோட பதிலடி.. ரொம்ப பலமா இருக்கும்.. சூதானமா இருங்கப்பா.. எச்சரிக்கும் பிஞ்ச்!

ராஜ்காட்: இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ராஜ்காட்டில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பதிலடி பலமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் களமிறங்கிய துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 110 ரன்களை அடித்து தனது அணியின் அபார வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகள்

ஒருநாள் சர்வதேச போட்டிகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளை விளையாடவுள்ளது. கடந்த 14ம் தேதி மும்பையில் முதல் போட்டி நடைபெற்றது.

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. துவக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் சதமடித்து தங்களது அணியின் அபார வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

திணறிய இந்திய பந்துவீச்சாளர்கள்

திணறிய இந்திய பந்துவீச்சாளர்கள்

துவக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னரின் அபார ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அவர்களின் விக்கெட்டை எடுக்கும் பௌலர்களின் முயற்சி தோல்வியடைந்தது.

ஆரோன் பிஞ்ச் எச்சரிக்கை

ஆரோன் பிஞ்ச் எச்சரிக்கை

இந்நிலையில் இன்று ராஜ்காட்டில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அடி பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இணையதளத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரர்கள் உள்ளனர்

சிறந்த வீரர்கள் உள்ளனர்

இந்திய அணியில் சர்வதேச அளவிலான சிறந்த வீரர்கள் உள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் அவர்களது பதிலடி கடுமையாக இருக்கும் என்று ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.

போட்டி கடுமையாக இருக்கும்

போட்டி கடுமையாக இருக்கும்

இலங்கைக்கு எதிரான 2020ம் ஆண்டின் முதல் சர்வதேச டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, முதல் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வருகிறது. இந்த தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ள இந்திய அணியினர், முதல் போட்டியில் தோற்ற நிலையில், இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 17, 2020, 13:06 [IST]
Other articles published on Jan 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+