Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியும் ஒரு சோகம்... உலக கோப்பை தொடரில், ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட 3வது வீரர் டி வில்லியர்ஸ்!!

வெலிங்டன்: உலக கோப்பை வரலாற்றில் 99 ரன்களில் அவுட் ஆன 3வது வீரர் என்ற சோக பதிவை தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் இன்று நிகழ்த்தினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக வெலிங்டனில் இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி, 82 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து, கம்ரான் ஷஷாத் பந்து வீச்சில், அம்ஜத் ஜாவித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கேட்ச் கொடுத்தார்

கேட்ச் கொடுத்தார்

ஓவர்-பிட்ச் பந்தை ஆப்-சைடில் கட் செய்ய முயன்றபோது, பாயிண்ட்டில் நின்ற ஜாவித்திடம் டி வில்லியர்ஸ் பிடிபட்டார்.

3வது வீரர்

3வது வீரர்

இதன்மூலம், உலக கோப்பை வரலாற்றிலேயே 99 ரன்னில் அவுட் ஆன 3வது வீரர் என்ற சோக பதிவு டி வில்லியர்ஸ் பெயரில் எழுதப்பட்டது.

முதல் வீரர் கில்கிறிஸ்ட்

முதல் வீரர் கில்கிறிஸ்ட்

2003ம் ஆண்டு உலக கோப்பையின்போது, இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 99 ரன்களில் அவுட் ஆனார். அவர்தான், உலக கோப்பையில் முதல் முறையாக 99 ரன்களில் அவுட் ஆன வீரர் ஆகும்.

டுமினி இரண்டாவது

டுமினி இரண்டாவது

2011 உலக கோப்பையின்போது, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் ஜே.பி.டுமினி இதேபோல 99 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அனைவருமே அதிரடி பேட்ஸ்மேன்கள்

அனைவருமே அதிரடி பேட்ஸ்மேன்கள்

தற்போது, டி வில்லியர்ஸ் இந்த வரிசையில் 3வதாக இணைந்துள்ளார். அவுட் ஆன மூவருமே அதிரடி பேட்ஸ்மேன்களாகும். 90 ரன்களை தாண்டிய பிறகு லாவகமாக, மெதுவாக ஆட வேண்டும் என்று நினைக்காதவர்களாகும்.

சச்சின் ஜஸ்ட் மிஸ்

சச்சின் ஜஸ்ட் மிஸ்

எப்போதுமே 90 ரன்களுக்கு மேல், அதிக பந்துகளை எடுத்துக்கொள்ளும் சச்சின் கூட, 2003 உலக கோப்பையின்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 98 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்தர் பந்து வீச்சில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 12, 2015, 12:49 [IST]
Other articles published on Mar 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+