அணிக்குள் அரசியல்.. தென் ஆப்பிரிக்கா உலக கோப்பை வெல்லாததன் காரணம் இதுதான்.. டிவில்லியர்ஸ் 'திடுக்'
டர்பன்: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் தனது சுயசரிதை புத்தகத்தை தென் ஆப்பிரிக்காவில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் அடுத்த வாரம் புத்தகம் ரிலீசாக உள்ளது.
அந்த புத்தகத்தில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிட்டுள்ளார். அதில் 2015ம் உலக கோப்பை அரையிறுதி போட்டியின் போது நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
2015 உலக கோப்பை கால் இறுதி போட்டியில் இலங்கையை வென்றோம். கிட்ட தட்ட அரையிறுதியில் அதே அணியுடன்தான் களமிறங்குவோம் என நினைத்தோம்.

திடீர் மாற்றம்
அரையிறுதிக்கு முந்தையநாள் இரவு அணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் வெர்னன் பிலாண்டர் பிட்டாக இருக்கிறார்.
நாளை நடக்கும் அரைஇறுதியில் கைல் அபோட்டுக்கு பதிலாக பிலாண்டரை களமிறக்க வேண்டும் என ஒருவர் எனக்கு அழைப்பு விடுத்தார் என சுயசரிதையில் குறிப்பிட்டள்ளார். ஆனால் அவர் யார் என்பதை குறிப்பிடவில்லை.

அணி தேர்வில் அரசியல்
இப்போதும் கூட அணி தேர்வில் நடந்த அரசியல் குறித்து நான் பேசவில்லை. அந்த போட்டியில் மூன்று ரன் அவுட், இரண்டு கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தோம். அதனால்தான் தோற்றோம். அபோட்டுக்கு பதிலாக பிலாண்டரை அணியில் சேர்த்ததால் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

மகிழ்ச்சி
மேலும் இந்தியாவில் தனக்கு ரசிகர்கள் வரவேற்பு அமோகமாக இருப்பதாக டி வில்லியர்ஸ் கூறினார். கடந்த வருடம் மும்பையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் தான் களமிறங்கியபோது, ஏபிடி.. ஏபிடி.. என ரசிகர்கள் குரல் எழுப்பியது தான் பேசுவது தனக்கே புரியாத அளவுக்கு சத்தமாக இருந்ததாகவும், இது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கோஷம்
இந்தியாவில் எங்கு சென்றாலும், தனக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளிக்கிறார்கள் என்றும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கூட தன்னை ரசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications