நேற்றைய போட்டியின் சிறப்பான தரமான சம்பவம்... கெயிலை ஓரங்கட்டிய டீ வில்லியர்ஸ்
அபுதாபி: ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.
இதில் 33 பந்துகளில் 73 ரன்களை அடித்து அதகளம் புரிந்த ஏபி டீ வில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இதன்மூலம் ஐபிஎல் சீசனில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை பெற்று டீ வில்லியர்ஸ் சாதனை புரிந்துள்ளார். முந்தைய சாதனையாளர் கிறிஸ் கெயிலை அவர் ஓரங்கட்டியுள்ளார்.

ஐபிஎல் பட்டியலில் 3வது இடம்
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் 28வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 வெற்றிகளை பெற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

22வது ஆட்டநாயகன் விருது
இந்த போட்டியில் 33 பந்துகளில் 73 ரன்களை அடித்து ஏபி டீ வில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் ஐபிஎல் சீசன்களில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவர் பெற்றுள்ள 22வது ஆட்ட நாயகன் விருது இது.

148 போட்டிகளில் ஆட்டம்
முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் பெற்றிருந்த 21 ஆட்ட நாயகன் விருதை முந்தி ஏபி டீ வில்லியர்ஸ் சாதித்துள்ளார். இவர் இதுவரை ஐபிஎல்லில் 148 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5வது இடத்தில் தோனி
இந்த பட்டியலில் டீ வில்லியர்சை அடுத்து கிறிஸ் கெயில் உள்ள நிலையில், 3வது இடத்தில் ரோகித் சர்மா 189 போட்டிகளில் விளையாடி 18 ஆட்ட நாயகன் விருதுகளையும் டேவிட் வார்னர் 132 போட்டிகளில் விளையாடி 17 ஆட்ட நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளனர். எம்.எஸ்.தோனி 176 போட்டிகளில் விளையாடி 17 ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications