டர்பன் : கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் அனைவராலும் விரும்பக் கூடிய அதிரடி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தற்போது 40 வயதாகி இருக்கும் டிவில்லியர்ஸ், கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதே போன்று 2021ஆம் ஆண்டு ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், உலகம் முழுவதும், ஐபிஎல் பாணியில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமே SA 20 தொடர் நடைபெறுகிறது.

ஆனால் , இதில் டிவில்லியர்ஸ் பங்கேற்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இது தொடர்பாக அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். இது குறித்து பேசிய டிவில்லியர்ஸ், நான் ஒருநாள் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப போகிறேன் என்று நினைக்கிறேன். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும், என்னால் உணர முடிகிறது.
என்னுடைய குழந்தைகளும் என்னை கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இதனால் என் குழந்தைகளுடன் இணைந்து நான் வலைப்பயிற்சியில் ஈடுபடப் போகிறேன். இதில், நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்றால், நான் கண்டிப்பாக கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப உள்ளேன். அதற்காக சர்வதேச போட்டியிலோ, இல்லை தென்னாப்பிரிக்கா உள்நாட்டு போட்டியில் பங்கேற்கிறேன் என்று சொல்ல முடியாது.
என்ன நடக்கிறது என்று விரைவில் பார்ப்போம். நான் பயிற்சி செய்யும் போது, என்னுடைய கண்கள் நன்றாக தெரிகிறதா, பவுலர்களை ஆதிக்கம் செலுத்த முடிகிறதா என்பதை பார்க்க வேண்டும். என்னுடைய குழந்தைகளுக்காக நான் இதை செய்ய போகிறேன்.
ஆர்சிபி அணிக்காக திரும்ப போகிறேனா என்று எல்லாம் கேட்க வேண்டும். எனக்கு மீண்டும் அழுத்தத்தில் சிக்கி கொள்ள விரும்பவில்லை. நான் களத்தில் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன் என்று டிவில்லியர்ஸ் சுறியுள்ளார். இதனால் டிவில்லியர்ஸ், லெஜண்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரிகிறது.