Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ மனுஷனே இல்லை.. 42 வயதில் அதிவேக செஞ்சுரி.. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ஏபி டி வில்லியர்ஸ்

ஷார்ஜா: வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கான டி20 தொடரில், ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் சதம் விளாசி ஏபி டி வில்லியர்ஸ் வெறியாட்டம் ஆடியுள்ளார். ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 48 ரன்கள் எடுக்க, அதிரடி காட்டிய டி ஆர்சி ஷார்ட் 25 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்தார். ஜோ பர்ன்ஸ் 38 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் தரப்பில் ஹார்டஸ் வில்ஜோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 210 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிக்கு, ரிச்சர்ட் லெவி அதிரடி தொடக்கம் அளித்து 29 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார்.

AB de Villiers Hit 37-Ball Century Against Australia Champions In World Championship of Legends Playing for South Africa Champions

பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். சிக்சர் மழையைப் பொழிந்த அவர், வெறும் 37 பந்துகளில் தனது மின்னல் வேக சதத்தைப் பதிவு செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற டி வில்லியர்ஸ் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 11 பிரம்மாண்ட சிக்சர்களுடன் 111 ரன்கள் விளாசி வானவேடிக்கை காட்டினார்.

அவருடன் ஜேபி டுமினி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி வெறும் 15.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்னும் 26 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டிப்பிடித்து மிரள விட்டார் டி வில்லியர்ஸ்.

வெறியாட்டம் ஆடிய சஞ்சு சாம்சன்.. விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி.. குறைந்த பந்தில் அரைசதம் விளாசி

வெறியாட்டம் ஆடிய சஞ்சு சாம்சன்.. விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி.. குறைந்த பந்தில் அரைசதம் விளாசி

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் தனது பேட்டிங் திறன் அப்படியே தான் இருக்கிறது என்பதை ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்திய ரசிகர்கள் பலரும் அவர் ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Story first published: Friday, October 9, 2026, 20:33 [IST]
Other articles published on Oct 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+