Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார் டிவில்லியர்ஸ்..WCL-ல் தென்னாப்பிரிக்க அணி கேப்டனாக திரும்புகிறார்

டர்பன் : தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏ பி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிக்குத் திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது தான் எந்த தொடரில் பங்கேற்க போகிறேன் என்பதை அறிவித்திருக்கிறார்.

ab de villiers south africa

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற அதே சமயத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற WCL என்ற தொடர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதில் யுவராஜ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் பங்கேற்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகள் இருந்து ஓய்வு பெற்றேன். நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் காலம் செல்ல மீண்டும் எனக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறது".

"அதற்கு காரணம் நான் என்னுடைய மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போது எனக்குள் இன்னும் கிரிக்கெட் வேட்கை இருந்ததை உணர முடிந்தது. எனவே நான் தற்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். அது மட்டும் இல்லாமல் பேட்டிங் பயிற்சியும் செய்து வருகின்றேன்".

"இதன் மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள wcl தொடரில் நான் விளையாட தயாராகி விடுவேன் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இந்த தென்னாப்பிரிக்க அணியில் காலிஸ், கிப்ஸ்,ஸ்டெயின், இம்ரான் தாகிர் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

டிவில்லியர்ஸ் திரும்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணியின் உரிமையாளர் அமண்தீப் சிங் பேசிய போது, WCL தொடரில் டிவில்லியர்ஸ் திரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அது எங்கள் அணி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொடருக்கும் மதிப்பை கூட்டும் விஷயமாக இருக்கும். இந்த தொடர் மேலும் பல உச்சத்தை தொடும் என நம்புகிறோம்"என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 28, 2025, 17:11 [IST]
Other articles published on Jan 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+