Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெண்டுல்கருக்கும் மேல டி வில்லியர்ஸ்... சொல்கிறார் பேனி டி வில்லியர்ஸ்

நாக்பூர்: சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த வீரர் ஏப் டி வில்லியர்ஸ் என்று கூறியுள்ளார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் பேனி டி வில்லியர்ஸ்.

ஒரு நாள் போட்டிகளில் இரு வீரர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சச்சினை விட சிறந்தவராக டிவில்லியர்ஸைக் காணலாம் என்றும் பேனி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

31 வயதாகும் டிவில்லியர்ஸ், சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த ஒரு நாள் போட்டியில் கலக்கலாக ஆடி 3-2 என்ற கணக்கில் தொடரையும் வென்று புதிய வரலாறு படைக்க உதவினார் என்பது நினைவிருக்கலாம்.

செம பார்ம்

செம பார்ம்

இந்தத் தொடரில் டிவில்லியர்ஸ் செம பார்மில் இருந்தார். 3 சதங்களை அவர் விளாசித் தள்ளினார். மேலும் மொத்தம் 358 ரன்களைக் குவித்து இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்தார் டிவில்லியர்ஸ்.

டெஸ்ட் சவாலுக்குத் தயார்

டெஸ்ட் சவாலுக்குத் தயார்

தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியைச் சந்திக்க டிவில்லியர்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணி தயாராகி வருகிறது. 5ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் தொடங்கவுள்ளது.

பாப்புலராகி விடுவார்

பாப்புலராகி விடுவார்

இந்த நிலையில் டிவில்லியர்ஸ் குறித்து பேனி டிவில்லியர்ஸ் கூறுகையில், உலக கிரிக்கெட் அரங்கில் சச்சினை விட மிகப் பிரபலமானவராக மாறி வருகிறார் டிவில்லியர்ஸ்.

அவருக்கும் மேல

அவருக்கும் மேல

இன்னும் சொல்லப் போனால், சச்சினை விட பிரபலமாகி விடுவார் டிவில்லியர்ஸ். அவரை விட மிகச் சிறந்த வீரர் டிவில்லியர்ஸ் என்பதில் சந்தேகம் இல்லை.

சச்சின் ரகம் இவர்

சச்சின் ரகம் இவர்

டிவில்லியர்ஸ், சச்சின் டெண்டுல்கர் ரகத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த வீரர். மிகத் திறமையான, அனைவராலும் விரும்பக் கூடிய, மார்க்கெட்டிங் தகுதி படைத்த வீரர் டிவில்லியர்ஸ் என்றார் பேனி டிவில்லியர்ஸ்.

17,000 ரன்கள்

17,000 ரன்கள்

தற்போதைய நிலையில் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அனைவராலும் புகழப்படும் டிவில்லியர்ஸ் இதுவரை 17,000 சர்வதேச ரன்களைக் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 23 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 21 சதங்களையும் அவர் போட்டுள்ளார்.

Story first published: Monday, November 2, 2015, 18:02 [IST]
Other articles published on Nov 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+