Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மார்ச்சில் செய்த தப்புக்கு ஜூலையில் தண்டனை.. வங்கதேச தொடரில் டி வில்லியர்சுக்கு தடை!

டாக்கா: வங்கதேசத்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க கேப்டனும், உலகின் நம்பர் ஒன் அதிரடி வீரர் என்ற பெருமையுள்ளவருமான டி வில்லியர்ஸ் வெளியேறுகிறார்.

டிவில்லியர்சுக்கு ஒரு போட்டியில் ஆட ஐசிசி கடந்த மார்ச் மாதம் தடை விதித்திருந்த நிலையில், அந்த தடை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நடைபெற்ற இரு டி20 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஒருநாள் போட்டித் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இப்போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக, டிவில்லியர்சுக்கு பதிலாக ஹசிம் ஆம்லா செயல்பட உள்ளார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள் அணி கேப்டனாக செயல்படுபவர் டி வில்லியர்ஸ். ஆனால், இந்த போட்டித்தொடரில் அவர் ஆடப்போவதில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 போட்டிகளில் பெரிதாக சோபிக்காத டிவில்லியர்ஸ், ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்திருந்த அவரின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாகும்.

டிவில்லியர்சுக்கு தடை

டிவில்லியர்சுக்கு தடை

உலக கோப்பையில் டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வரை முன்னேறியது. அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்து பைனல் செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அரையிறுதியில், தென் ஆப்பிரிக்க அணி மெதுவாக ஓவர்கள் வீசியதாக நடுவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, அடுத்த ஒரு போட்டியில் ஆட டிவில்லியர்சுக்கு தடை விதிக்கப்பட்டது.

இத்தனை மாதங்கள் பிறகு

இத்தனை மாதங்கள் பிறகு

மார்ச் மாதம் நடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா, நாளை, வெள்ளிக்கிழமைதான், முதல்முறையாக, ஒருநாள் போட்டியில் ஆட உள்ளது. எனவே, டிவில்லியர்சுக்கான தடை அந்த போட்டியில் அமலாகும். இருப்பினும், அடுத்த இரு போட்டிக்கும் டிவில்லியர்சுக்கு ரெஸ்ட் கொடுத்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

ஓய்வு

ஓய்வு

இதுகுறித்து பயிற்சியாளர் ரசல் டொமிங்கோ, கூறுகையில், தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து பல போட்டிகளில் ஆட உள்ளது. எனவே டிவில்லியர்சுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவை எடுத்துள்ளோம். அடுத்தகட்ட பேட்ஸ்மேன்கள் அணியை காப்பாற்றுவார்கள். டிவில்லியர்ஸ் தனது குழந்தை, மனைவியுடன் நேரத்தை செலவிட உதவிகரமாக இருக்கும் என்றார்.

Story first published: Thursday, July 9, 2015, 12:41 [IST]
Other articles published on Jul 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+