Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கை, காலை ஆட்டி காமெடி டான்ஸ் ஆடிய கோலி.. செமயாக கலாய்த்த டி வில்லியர்ஸ்! - வீடியோ

மும்பை : இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஆடிய டான்ஸ் ஒன்றிற்கு சூப்பர் கமென்ட் போட்டு கலாய்த்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ்.

விராட் கோலி விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பதில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். உலக அளவில் இருக்கும் பல முன்னணி விளையாட்டு வீரர்களை பின் தள்ளி அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

இந்த நிலையில், தான் ஒப்பந்தம் செய்துள்ள ஒரு பிராண்ட்டிற்கான ஷூட்டிங்கில் பங்கேற்றார். அப்போது ஒரு நடனம் ஆடினார். அதை நெருக்கமாக நின்று படம் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

காமெடி டான்ஸ்

இந்த ஷூட்டிங் காட்சியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் விராட் கோலி. அதற்கு வழக்கம் போல லைக்ஸ் பிய்த்துக் கொண்டு போனது. அந்த வீடியோவில் கோலி டான்ஸ் போல ஏதோ கை, காலை ஆட்டிக் கொண்டு இருந்தார்.

ஆஹா, ஓஹோ

ஆஹா, ஓஹோ

அந்த நடன வீடியோவுக்கு கீழே ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து (!) கமென்ட் போட்டு இருந்தார்கள். சிலர் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வழி விடுங்கள் என கூவி இருந்தனர்,. இதற்கு இடையே தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் ஒரு நக்கல் கமென்ட் போட்டு இருந்தார்.

நக்கல் கமென்ட் என்ன?

நக்கல் கமென்ட் என்ன?

முதலில் "கோலியின் நடன அசைவுகளை குறிப்பிட்டு, "மூவ்ஸ்" என குறிப்பிட்டு இருந்த அவர், அடுத்து "யோசித்துப் பாருங்கள். நான் அது போல ஆட வேண்டி இருந்தால் எப்படி இருக்கும்" என கிண்டல் செய்திருந்தார்.

கோடியில் பணம்

கோடியில் பணம்

என்ன கிண்டல் செய்தாலும், விராட் கோலி அந்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததற்கு கோடிக்கணக்கில் பணம் பெறுவார். சமீபத்தில் வெளியான ஒரு புள்ளி விவரத்தின் படி கோலி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சுமார், ஒரு கோடியே, 35 லட்சம் வரை வாங்குகிறார் என தெரிய வந்துள்ளது.

3 கோடி மக்கள்

3 கோடி மக்கள்

கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 கோடியே, 80 லட்சம் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அதன் பயனாகவே அவர் இப்படி கோடியில் சம்பாதிக்கிறார் என்கிறார்கள். இந்தியாவில் வேறு யாருக்கும் இத்தனை பெரிய கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தகக்கது.

Story first published: Friday, July 26, 2019, 17:13 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+