Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 போட்டிகள்... 3 தோல்விகள்... மோசமான பீலிங்கை கொடுத்திருக்கு.. டீ வில்லியர்ஸ் ஆதங்கம்

ஷார்ஜா : ஆர்சிபி தொடர்ந்து 3வது தோல்வியாக நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 120 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த இலக்கை 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் முறியடித்தது.

இந்நிலையில் அடுத்தடுத்த 3 தோல்விகள் மோசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக ஆர்சிபியின் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி தோல்வி

ஆர்சிபி தோல்வி

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் மோதிய ஆர்சிபி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்வியுடன் அந்த அணி தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள போதிலும் புள்ளிகள் அடிப்படையில் பஞ்சாப் அணியைவிட ஆர்சிபி பின்தங்கியுள்ளது.

மோசமான உணர்வு

மோசமான உணர்வு

இந்நிலையில், 3 தொடர் தோல்விகள் மோசமான உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்த தொடரின் சிறப்பே அதுதான் என்றும் 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் கிடைக்கும், தோல்வியும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னேறுவதே நோக்கம்

முன்னேறுவதே நோக்கம்

நேற்றைய தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வில்லியர்ஸ், தோல்விகளை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறுவதையே தற்போதைய நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஷார்ஜாவில் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆர்சிபியின் இறுதி லீக் போட்டி

ஆர்சிபியின் இறுதி லீக் போட்டி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதையும் குறிப்பிட்டு பேசிய டீ வில்லியர்ஸ், நாளை விளையாடவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது என்றும் அதில் மிகவும் சிறப்பான திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 1, 2020, 14:55 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+