Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லைக்ஸை அள்ளும் டிவில்லியர்ஸுன் பாடல் வீடியோ.. சுவாரஸ்ய கமெண்ட் செய்த மேக்ஸ்வெல் - முழு வீடியோ!

மும்பை: தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், பாடல் பாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரராக திகழ்பவர் டிவில்லியர்ஸ். இவரை சர்வதேச போட்டிகளிலும் இன்றளவும் ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர்.

ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிரடி காட்டி தனக்கென மிஸ்டர் 360 என தனி முத்திரை பதித்தவர்.

ஏபி டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸின் ஆட்டத்திற்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. வில்லைப்போல் போல் எல்லா திசையிலும் வளைந்து ஆடும் அவரின் திறமை இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடிகள் ஆகும்.

இன்ஸ்டா வீடியோ

இந்நிலையில் அவர் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் டிவில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவருடன் இணைந்து அவரின் மனைவி டேனியல்லே டிவில்லியர்ஸும் பாடியுள்ளார்.

 உருக்கம்

உருக்கம்

மேலும் கேப்சனில், எனது தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடியுள்ளேன். இந்த பாடல் எனக்கு புதிய அர்த்தத்தை கொடுத்த ஒன்றாகும். கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார். என்ன நடந்தாலும் அவர் நம்முடன் இருப்பார் என்பதை உணர்த்தும் எனக்கூறியுள்ளார். அதே போல இந்த பாடல் எனது தந்தையை நியாபகப்படுத்துகிறது. அவர் எனக்கு தந்தையாக அமைந்தது எனக்கு பெரும் பாக்கியம் என தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் கமெண்ட்

மேக்ஸ்வெல் கமெண்ட்

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் சுவாரஸ்ய கமெண்ட் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு நீங்கள் பாடியதில் இருந்து இந்தாண்டு கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது எனத்தெரிவித்துள்ளார். டிவில்லியர்ஸும் - மேக்ஸ்வெல்லும் ஐபிஎல்-ல் ஆர்சிபி அணிக்காக இணைந்து விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 2, 2021, 18:38 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+