Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி - அனுஷ்கா குழந்தையை கொஞ்சும் “கட்டப்பா” டிவில்லியர்ஸ்.. விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்!

மும்பை : விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

Recommended Video

Bravoவின் 500 Wickets சாதனை; T20ல் வரலாறு | OneIndia Tamil

இதையடுத்து இணையமே இவர்கள் குழந்தை குறித்து பேசத் துவங்கி உள்ளது. மீம் கிரியேட்டர்கள் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

அதில் டிவில்லியர்ஸ்-ஐ கட்டப்பாவாக வைத்து ஒருவர் போட்டுள்ள மீம் தனியாக வைரல் ஆகி வருகிறது.

கோலி - அனுஷ்கா காதல்

கோலி - அனுஷ்கா காதல்

கிரிக்கெட் வீரர் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி கடந்த 2015இல் ஒரு ஷாம்பூ விளம்பரத்தில் சேர்ந்து நடித்தனர். அதன் பின் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வலம் வந்தன. அதை நிரூபிப்பது போல அனுஷ்கா சர்மா, கோலி ஆடும் போட்டிகளில் பார்வையாளராக இடம் பெற்றார்.

ரசிகர் கூட்டம் அதிகம்

ரசிகர் கூட்டம் அதிகம்

இருவரும் 2018இல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு துறைகளில் பிரபலம் என்பதால் இருவருக்குமான ரசிகர் கூட்டமும் அதிகம். இவர்கள் சேர்ந்து என்ன செய்தாலும் அது இணையத்தில் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் தான் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ள செய்தி வெளியாகி உள்ளது.

கோலி - அனுஷ்கா அறிவிப்பு

கோலி - அனுஷ்கா அறிவிப்பு

விராட் கோலி - அனுஷ்கா சர்மா இருவரும் கூட்டாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜனவரியில் இருந்து நாங்கள் மூன்று பேர் ஆக இருக்கிறோம் என அறிவித்து உள்ளனர். அவர்களுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

அதே சமயம், இதை மீம்களாக மாற்றி கிண்டலும், கேலியும் செய்து மகிழ்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதில் ஒருவர் ஏபி டிவில்லியர்ஸ்-ஐ இழுத்துள்ளார். ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் ஒன்றாக ஆடி வருகின்றனர்.

நல்ல நட்பு உள்ளது

நல்ல நட்பு உள்ளது

தலைசிறந்த பேட்ஸ்மேன்களான ஒருவரும் ஒரே அணியில் ஆடுவதால் அவர்கள் இடையே நல்ல நட்பு உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேட்டிகளில் பேசுவதையும் ரசிகர்கள் எப்போதும் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஏபி டிவில்லியர்ஸ்-ஐ பாகுபலி கட்டப்பாவாக மாற்றி இருக்கிறார் ஒரு நெட்டிசன்.

கட்டப்பா டிவில்லியர்ஸ்

கட்டப்பா டிவில்லியர்ஸ்

பாகுபலி படத்தில் சத்யராஜ் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அவர் பாகுபலியின் மகனை எடுத்து கொஞ்சும் காட்சி பிரபலமானதாகும். அதே இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் - கோலியின் குழந்தையை வைத்து அவர் கற்பனை செய்துள்ளார்.

வைரல் பதிவு

வைரல் பதிவு

அந்த மீம் ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. அதன் கீழே கமென்ட் போட்டுள்ளவ்ர்கள் எல்லோருக்கும் தாங்கள் சிரிப்பதை பதிவு செய்துள்ளனர். பார்த்தவுடன் குபீர் சிரிப்பை வரவழைக்கும் இந்த மீம் வைரல் பதிவாக மாறி உள்ளது.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடரில் விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆட உள்ளனர். இதுவரை கோப்பை வெல்லாத தங்கள் அணியின் சோகத்தை இந்த ஆண்டாவது தீர்ப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

Story first published: Thursday, August 27, 2020, 14:41 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+