Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்த காரணத்தால் தான் இவர் சூப்பர் ஸ்டார்” ரசிகர்கள் அறியாத டிவில்லியர்ஸின் உலக சாதனைகள்- பட்டியல்

சென்னை: கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்பட்ட ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Recommended Video

AB de Villiers retires from cricket, to miss IPL and RCB | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க அணியின் முதுகெலும்பாக இருந்த ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு உலகின் அனைத்து திசைகளிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகை அல்ல.

360 டிகிரியில் சுழற்றி சுழற்றி சிக்ஸர்களை விளாசிய அவரின் ஆட்டத்தை இனி காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

எனக்கு வயது 37 ஆகிறது. என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது. நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து விளையாடினேன். முன்பை போல தற்போது பிரகாசமாக செயல்பட முடியவில்லை. இந்த நிதர்சனத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். எனவே என்னுடைய ஓய்வு முடிவை தற்போது நான் எடுத்து இருக்கிறேன். இது தான் ரசிகர்களுக்கு டிவில்லியர்ஸ் கூறியுள்ள காரணம். இந்நிலையில் டிவில்லியர்ஸுன் ஆகச்சிறந்த பெருமைகளையும், சாதனைகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

பேட்டிங் புள்ளிவிவரம்

பேட்டிங் புள்ளிவிவரம்

114 டெஸ்ட் போட்டிகள் ; 8,765 ரன்கள், அதிகபட்சம் ( 278*). 22 சதங்கள் மற்றும் 46 அரைசதங்கள்.

228 ஒருநாள் போட்டிகள்; 9,577 ரன்கள், அதிகபட்சம் (176). 25 சதங்கள் மற்றும் 53 அரைசதங்கள்

78 சர்வதேச டி20 போட்டிகள்; 1,672 ரன்கள், அதிகபட்சம் (79*). 10 அரைசதங்கள்

184 ஐபிஎல் போட்டிகள்; 5,162 ரன்கள், அதிகபட்சம் (133). 3 சதங்கள் மற்றும் 40 அரைசதங்கள்

சாதனைகள்

அசத்தல் சாதனைகள்

அசத்தல் சாதனைகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் (16 பந்துகளில்), சதம் (31 பந்துகளில்) மற்றும் 150 ரன்கள் (64 பந்துகளில்) விளாசிய வீரர் என்ற பெருமை டிவில்லியர்ஸையே சார்ந்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அதிக சராசரி ( 63.52) கொண்டவர் டிவில்லியர்ஸ் தான். இது குறைந்தது 20 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் புள்ளிவிவரமாகும்.

தொடர்ச்சியாக சதங்கள்

தொடர்ச்சியாக சதங்கள்

சர்வதேச போட்டிகளில் டிவில்லியர்ஸ் இதுவரை 20,014 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களில் அதிக ரன்களை குவித்த 2வது வீரராக அவர் விலங்குகிறார். முதலிடத்தில் ஜாக் காலீஸ் 25,534 ரன்களுடன் உள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 9 வீரர்கள் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசியுள்ளனர். அதில் டிவில்லியர்ஸ் முக்கியமானவர்.

விக்கெட் கீப்பர்

விக்கெட் கீப்பர்

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்களை ( 11) கைப்பற்றிய விக்கெட் கீப்பர்களில் டிவில்லியர்ஸ் முதலிடம் வகிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 அரைசதங்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். இதே போல ஒரே ஒரு 50 ஓவர் போட்டியில் அதிக சிக்ஸர்களை (16) விளாசிய 2வது வீரராகவும் டிவில்லியர்ஸே உள்ளார்.

ஐபிஎல் சாதனைகள்

ஐபிஎல் சாதனைகள்

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை டிவில்லியர்ஸ் ஒரு கில்லி என்றே கூறலாம். ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த அவர் இதுவரை 251 சிக்ஸர்களை அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் யாருமே இதனை செய்ததில்லை. இதே போல ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் ( 25) விருதுகளை பெற்ற வீரர் என்ற பெருமையும் டிவில்லியர்ஸையே சேரும். இப்படிபட்ட சிறந்த ஜாம்பவான் ஓய்வு பெறுவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Story first published: Friday, November 19, 2021, 16:50 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+