இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி.. தலைமைப் பயிற்சியாளராக அப்பாஸ் அலி நியமனம் !
மும்பை: நேபாளம் செல்லும் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.
இந்த போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் அரங்கில் வரும் ஜூன் 10, 11 மற்றும் 12ம் தேதிகள் நடைபெறுகிறது.

இதற்கான அணி குறித்து ஆலோசிக்க சமீபத்தில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூட்டத்தை கூட்டியது. இதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல சிறப்பான வரலாற்றை தன் பக்கம் வைத்துள்ளார்.
அப்பாஸ் அலி, இந்தியா அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஏற்கனவே ஆத்திரேலியா சுற்றுப் பயணம்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா போன்ற முக்கிய தொடர்களில் பயிற்சியாளராக இருந்துள்ளார். சமீபத்தில் நடந்த வங்கதேச சுற்றுப்பயணத்தின் போதும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications