Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸ் அடிக்காமல் தடுத்து ஆடிய தோனி.. குத்திக் காட்டிய முன்னாள் பாக். வீரர்.. வெடித்த சர்ச்சை!

கராச்சி : 2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை அரை இறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேண்டும் என்றே தோல்வி அடைந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் மீண்டும் கூறி உள்ளார்.

Recommended Video

Abdul Razzaq wants penalty to India for losing against England in 2019 WC.

சில நாட்கள் முன்பு பென் ஸ்டோக்ஸ் தன் புதிய புத்தகத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் ரோஹித், கோலி மர்மமான முறையில் பேட்டிங் செய்ததாகவும், தோனி வெற்றி பெறும் நோக்கம் இன்றி ஆடியதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் அந்த சர்ச்சையை மீண்டும் பேசத் துவங்கினர்,

விவாதம்

விவாதம்

அதை அடுத்து பென் ஸ்டோக்ஸ் தான் இந்தியா வேண்டும் என்றே தோல்வி அடைந்ததாக கூறவில்லை எனவும், புகழ் வெளிச்சத்துக்காக சிலர் மாற்றி கூறி வருவதாகவும் விளக்கம் கூறினார். அதன் பின், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இதை பெரிய விவாதமாக மாற்றி வருகின்றனர்.

ஐசிசி தண்டனை

ஐசிசி தண்டனை

முன்னாள் பாகிஸ்தான் அணி ஆல் - ரவுண்டர் அப்துல் ரசாக் இது பற்றி பேசி உள்ளார். குறிப்பாக, மேட்ச் பிக்ஸிங் செய்தால் ஐசிசி தண்டனை தருவது போல, வேண்டும் என்றே தோல்வி அடைந்தாலும் தண்டனை தர வேண்டும் என அவர் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

ரோஹித் - கோலி பேட்டிங்

ரோஹித் - கோலி பேட்டிங்

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 330 ரன்களை சேஸிங் செய்தது. ரோஹித் சதம், கோலி அரைசதம் அடித்தாலும் அவர்கள் ஆட்டமிழந்த போது இந்திய அணிக்கு அதிக ரன் ரேட் தேவை இருந்தது.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

அடுத்து வந்த தோனி பவுண்டரி அடிக்க முற்படாமல், சிங்கிள் ரன்களை எடுத்து வந்தார். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 71 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி - கேதார் ஜாதவ் சிங்கிள் ரன்களாக எடுத்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றால் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்ற நிலையில், இந்தியா தோல்வி அடைந்தது. அதை அடுத்து இந்தியா வேண்டும் என்றே போட்டியில் தோல்வி அடைந்தாக கடும் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

அபராதம் விதிக்க வேண்டும்

அபராதம் விதிக்க வேண்டும்

அது குறித்து தான் இப்போது மீண்டும் சர்ச்சை ஆகி உள்ளது. அப்துல் ரசாக் கூறுகையில், மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் செய்தால் ஐசிசி அதற்கு தண்டனை அளிப்பது போல, ஒரு அணி வேண்டும் என்றே தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணியை அரை இறுதிக்கு முன்னேற விடாமல் செய்ததற்கும் பெனால்ட்டி, அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார்.

சரியாக பந்து வீசவில்லை

சரியாக பந்து வீசவில்லை

ஒரு தரமான பந்துவீச்சாளர் லைன், லென்த்தில் சரியாக பந்து வீசாமல், விக்கெட் எடுக்க முயற்சி செய்யாமல் ரன்களை விட்டுக் கொடுப்பது ஆகியவற்றை கிரிக்கெட் ஆடும் அனைவரும் எளிதாக காணலாம். அவர் வேண்டும் என்றே அப்படி செய்கிறாரா? இல்லையா என்பதை சொல்லலாம் என்றார்.

சிக்ஸ் அடிக்காமல்..

சிக்ஸ் அடிக்காமல்..

தோனி சிக்ஸ் அடிக்காமல் சிங்கிள் ரன்களாக எடுத்ததை பற்றி குறிப்பிட்ட அவர், ஒரு வீரர் சிக்ஸ் அல்லது ஃபோர் அடிக்க முடிந்தும் பந்தை தடுத்து ஆடுகிறார் என்றால் அதை எளிதாக காண முடியும் என பெயர் குறிப்பிடாமல் கூறினார்.

ஐசிசி, பிசிசிஐ மௌனம்

ஐசிசி, பிசிசிஐ மௌனம்

அந்தப் போட்டி குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஓயாமல் புகார் கூறுவதும், பிசிசிஐ மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் அமைதியாக இருப்பதும் தொடர்ந்து வருகிறது. ஐசிசி அல்லது பிசிசிஐ இது குறித்து வாய் திறக்க வேண்டும்.

Story first published: Wednesday, June 3, 2020, 19:21 [IST]
Other articles published on Jun 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+