Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா அது? ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்!

சூரத் : கர்நாடகா அணியைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் எடுத்து மிரட்டி இருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கர்நாடகா - ஹரியானா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய கர்நாடகா அணியின் மிதுன், கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சாதனை உட்பட 5 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இது இந்த ஆண்டில் அவர் எடுக்கும் இரண்டாவது ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் அரையிறுதி

முதல் அரையிறுதி

சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகா - ஹரியானா அணிகள் மோதின. கர்நாடகா அணியின் ஸ்ரேயாஸ் கோபால் தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசியது ஹரியானா அணி.

ரன் குவித்த ஹரியானா

ரன் குவித்த ஹரியானா

ஹரியானா அணி முதல் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள்எடுத்து இருந்தது. ஹிமான்ஷு ரானா 61 ரன்கள் எடுத்தும், ராகுல் டேவாதியா 32 ரன்கள் எடுத்தும் பேட்டிங் செய்து வந்தனர்.

மிதுன் கலக்கல் ஓவர்

மிதுன் கலக்கல் ஓவர்

அப்போது 20வது ஓவரை வீச வந்தார் அபிமன்யு மிதுன். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஹிமான்ஷு ரானா, ராகுல் டேவாதியா, சுமித் குமார், அமித் மிஸ்ரா ஆட்டமிழந்தனர். அடுத்த பந்துகளில் வைடு மற்றும் ஒரு ரன் கொடுத்த மிதுன், கடைசி பந்தில் ஜெயந்த் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

5 விக்கெட் சாதனை

5 விக்கெட் சாதனை

ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்திய அபிமன்யு மிதுன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்னதாக வங்கதேச வீரர் அல் அமின் ஹுசைன் 2௦13இல் உள்ளூர் டி20 போட்டியில் இதே சாதனையை செய்தார்.

ஒரே ஆண்டில் இரண்டு முறை

ஒரே ஆண்டில் இரண்டு முறை

கடந்த சில வாரம் முன்பு நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் அபிமன்யு மிதுன், தன் பிறந்தநாள் அன்று, இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து கலக்கினார். அதையடுத்து, தற்போது டி20 போட்டியில் ஒரே மீண்டும் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார்.

மூன்று தொடர்களில் சாதனை

மூன்று தொடர்களில் சாதனை

இந்தியாவின் மூன்று உள்ளூர் போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி மற்றும் சையது முஷ்டாக் அலி ட்ராபி என மூன்றிலும் ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் அபிமன்யு மிதுன் மட்டுமே.

அதிரடி சேஸிங்

அதிரடி சேஸிங்

அபிமன்யு மிதுன் சாதனை செய்த நிலையில், அடுத்து அதிரடியாக சேஸிங் செய்தது கர்நாடகா அணி. கேஎல் ராகுல் 31 பந்தில் 66 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 42 பந்தில் 87 ரன்கள் குவித்தார்.

கர்நாடகா வெற்றி

கர்நாடகா வெற்றி

அடுத்து வந்த மனிஷ் பாண்டே 3*, மயங்க் அகர்வால் 30* ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். கர்நாடகா அணி 15 ஓவர்களில் 195 ரன்களை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விசாரணை

அபிமன்யு மிதுன் சாதனை செய்தது ஒருபுறம் என்றால், அவர் கர்நாடகா பிரீமியர் லீக் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது மறுபுறம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Story first published: Friday, November 29, 2019, 19:50 [IST]
Other articles published on Nov 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+