Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல ஐபிஎல் வீரர் அபிஷேக் கைது.. திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல், பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊக்ளி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். "அபிஷேக் போரலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

திங்கள்கிழமை நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்ட, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்று ஊக்ளி காவல் கண்காணிப்பாளர் குணார் பூஷன் சிங் தெரிவித்தார். மொக்ரா போலீசாரால் கைது செய்யப்பட்ட அபிஷேக் போரல், சின்சுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.பிஎன்எஸ் பிரிவு 69 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Abhishek Porel

முன்னதாக, கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் ஜூன் 23 அன்று மொக்ரா காவல் நிலையத்தில் போரல் மீது புகார் அளித்திருந்தார். அதில், தங்களுக்குள் சுமார் மூன்றரை ஆண்டுகளாக காதல் உறவு இருந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இப்புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சந்தன்நகரில் உள்ள போரலின் வீட்டிற்கு போலீசார் பலமுறை சென்றபோதிலும், அவரைக் கண்டறிய முடியவில்லை.

IND vs SL: இந்திய அணியில் 6வது இடத்தில் யார் விளையாடனும்? பிளேயிங் XI குறித்து ஜாபர் பேச்சு</a><a class=" width="200" height="113">

IND vs SL: இந்திய அணியில் 6வது இடத்தில் யார் விளையாடனும்? பிளேயிங் XI குறித்து ஜாபர் பேச்சு

அபிஷேக் போரல் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானதில் இருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 35 போட்டிகளில் விளையாடியுள்ள இடதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணியில் நான்கு போட்டிகளில் விளையாடி, 108 ரன்கள் குவித்தார்.

கடினமான காலக் கட்டத்தில் இருக்கிறார் ரிஷப் பண்ட்.. எப்போதும் எதிர்மறையான செய்தியே வருது- கையிப்

Also Read

கடினமான காலக் கட்டத்தில் இருக்கிறார் ரிஷப் பண்ட்.. எப்போதும் எதிர்மறையான செய்தியே வருது- கையிப்

ஐபிஎல் தவிர, உள்நாட்டு கிரிக்கெட்டில் வங்காள அணிக்காகவும் போரல் விளையாடியுள்ளார். இதுவரை 32 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள், 23 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முறையே 1408, 833 மற்றும் 1590 ரன்கள் எடுத்துள்ளார். ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆகியவற்றில் வங்காள அணியின் முக்கிய வீரராகவும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

Story first published: Tuesday, August 11, 2026, 18:32 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+