Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றிய சாம்சன், சூர்யவன்ஷி.. ஒத்த ஆளாக வித்தையை காட்டிய அபிஷேக் சர்மா.. 20 பந்தில் அரைசதம்!

நிஷின்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய விளையாட்டு போட்டிகள் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். டாப் ஆர்டர் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த சூழலில், அபிஷேக் சர்மா எந்தவித கவலையும் ஒன்றி பொளந்து கட்டி இருக்கிறார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கத்திற்காக இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளராக பும்ராவை மட்டுமே சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர், 3 ஸ்பின்னர்களை கொண்டு வந்திருக்கிறார்.

Abhishek Sharma

இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 2 சிக்சர்களை பறக்கவிட, அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இதன்பின் சஞ்சு சாம்சன் களம் புகுந்தார்.

ஒரு பக்கம் அபிஷேக் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று விளாச, அதிரடியாக விளையாட முயன்று சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட அசரவில்லை. பவர் பிளேவின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து 20 பந்துகளில் அபிஷேக் சர்மா தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதலே பேட்டிங் செய்ய பிட்ச் கொஞ்சம் கடினமாக இருந்த நிலையில், அபிஷேக் சர்மா அட்டாக் செய்வது மட்டுமே ஒரே திட்டம் என்று களமிறங்கி பொளந்து கட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் 100 சிக்சர்களை விளாசி அபிஷேக் சர்மா புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதனால் அபிஷேக் சர்மாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மிக முக்கியமான பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா அசத்தலாக ரன்களை சேர்த்திருக்கிறார். இதன் மூலமாக பிரஷரான போட்டிகளில் அபிஷேக் சர்மா ரன் குவிக்க பாடம் கற்று வருவதாகவும் பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 3, 2026, 10:48 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+