Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அபிஷேக் சர்மா.. மனம் தளர வேண்டாம் என சூர்யகுமார் அட்வைஸ்

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த இளம் வீரர் அபிஷேக் சர்மாவிற்கு, இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் கடினமான இந்த நேரத்தில் அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், அதிகபட்சமாக ஒரு போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்திய அணி இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய போதிலும், அபிஷேக்கின் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் இருந்தது.

Abhishek sharma

தன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அபிஷேக் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்தத் தொடரில் தனது மோசமான செயல்பாட்டைக் கண்டு தானும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், விரைவில் வலுவான ஆட்டத்துடன் திரும்புவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

இது வெறும் ஆரம்பம் தான்.. வைபவ் சூர்யவன்ஷி பதிவு.. அனைத்து சாதனையையும் முறியடிப்பார்- லட்சுமண்

இது வெறும் ஆரம்பம் தான்.. வைபவ் சூர்யவன்ஷி பதிவு.. அனைத்து சாதனையையும் முறியடிப்பார்- லட்சுமண்

"பலர் உங்கள் திறமை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உங்களால் நியாயம் செய்ய முடியாமல் போகும்போது அது மிகவும் வலிக்கிறது," என்று அபிஷேக் சர்மா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.அபிஷேக்கின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்குப் பதிலளித்துள்ள சூர்யகுமார் யாதவ், அவரை எப்போதும் போல் இருக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஆட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் என்பது மிகவும் இயல்பான ஒன்று என்பதை நினைவூட்டிய அவர், இதற்காக மனம் தளர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். "கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் புன்னகைக்க நீ பல காரணங்களைக் கொடுத்துள்ளாய் தம்பி. மிக முக்கியமான தருணங்களில் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்துள்ளாய்," என்று சூர்யகுமார் யாதவ் கமெண்ட் செய்துள்ளார்.

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெசிங் முசரபானியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் அபிஷேக் முறையே 1, 8, 2 ரன்கள் என மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்.

அபிஷேக் தடுமாறிய அதே வேளையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இத்தொடரில் அபாரமாக விளையாடி 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். குறிப்பாக, மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளாசிய 81 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்த ஆர்சிபி வீரர் முன்பு திலக் வர்மா எல்லாம் ஒன்றுமே இல்லை.. ஸ்ரீகாந்த் கோபம்

இந்த ஆர்சிபி வீரர் முன்பு திலக் வர்மா எல்லாம் ஒன்றுமே இல்லை.. ஸ்ரீகாந்த் கோபம்

இதற்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அபிஷேக் சர்மா ஐந்து போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும், தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து ஜிம்பாப்வே தொடரிலும் வாய்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 27, 2026, 20:07 [IST]
Other articles published on Jul 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+